சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு
International Textile Summit-360*
கோயம்புத்தூரில்
29.01.2026 மற்றும் 30.01.2026
ஆகிய நாட்களில் நடைபெறும்
சர்வதேச ஜவுளி தொழில் மாநாட்டில்,
காட்சியரங்குகள் அமைக்க விரும்பும்
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த
ஜவுளி தொழில் நிறுவனங்கள்
13.01.2026-க்குள் இணையதளம் மூலம்
விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார். இ.ஆ.ப,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. ஜன. 7. -
கோயம்புத்தூர்
சர்வதேச ஜவுளி மாநாடு
கோயம்புத்தூரில் 29.01.2026 மற்றும் 30.01.2026
ஆகிய நாட்களில் நடைபெறும்
சர்வதேச ஜவுளி தொழில் மாநாட்டில்,
காட்சியரங்குகள் அமைக்க விரும்பும்
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த
ஜவுளி தொழில் நிறுவனங்கள்
13.01.2026-க்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இஆப,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு அரசு, துணிநூல் துறை மற்றும்
இந்திய தொழில் கூட்டமைப்பு (CII)
இணைந்து நடத்தும் -
International Textile Summit-360*
என்ற சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்
29 மற்றும் 30 ஆகிய தினங்களில்
கொடீசியா வளாகம் கோயம்புத்தூரில்
நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டை 2030 ஆம் ஆண்டிற்குள்
USD 1 Trillion பொருளாதார
மாநிலமாக மாற்றும்
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின்
தொலைநோக்கு இலக்கை அடைய
ஜவுளி தொழில் வளர்ச்சி முக்கிய பங்கு
வகிக்கும் வகையில் இம்மாநாடு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில்
கருத்தரங்குகள்
(Conference)
கண்காட்சி(Exhibition)
வாங்குபவர் மற்றும் விற்பவர் சந்திப்பு
(Reverse Buyer Seller Meets) மற்றும்
அழகுநயப்பு காட்சி (Fashion Show)
ஆகியவை இடம்பெற உள்ளன.
மேலும் சுமார் 100 காட்சியரங்குகள் கொண்ட கண்காட்சியும் நடத்தப்பட உள்ளது.
இந்த கண்காட்சியில் காட்சியரங்குகள்
அமைக்க விரும்பும்
ஜவுளி தொழில் நிறுவனங்கள்
13.01.2026.க்குள்
சேலம் மண்டல துணை இயக்குநர்
அலுவலக மின்னஞ்சல்
ddtextilessalemregional@gmail.com
மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்நிகழ்வில் பங்கேற்பதன் மூலம்,
வெளிநாட்டு முதலீடு மற்றும் ஏற்றுமதிகள் அதிகரித்து,
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்.
எனவே அனைத்து
ஜவுளித்தொழில் நிறுவனங்கள்
மற்றும்
ஜவுளித்தொழில் சங்கங்கள்
இந்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்குமாறு
கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் தகவலுக்கு
மண்டல துணை இயக்குநர் அலுவலகம்,
துணிநூல்துறை.
18-21 சங்ககிரிமெயின்ரோடு,
குகை, சேலம் - 636 006,
தொலைபேசி எண் 0427-2913006.
என்ற முகவரியில்
தொடர்பு கொள்ளலாம்.
மேலும், மேற்காண் கண்காட்சியில்
Spinning, Fabric,
Garments,
Home Textiles.
Integrated Manufacturers,
Brands from Tamilnadu.
Technical Textiles
Sustainablity and Recycling,
Raw Material / Recycled Textile/
Man Made Fibre
ஆகிய காட்சியரங்குகள்
பங்கு கொள்ள இருப்பதால்
ஜவுளித் தொழில் முனைவோர்கள்
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப
அவர்கள் தெரிவித்துள்ளார்.
-----------------------------------------.