கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
பேடரப்பள்ளி 3-வது வார்டு
மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்
மாணவ, மாணவிகளுக்கு
மூன்றாவது பருவத்திற்கான விலையில்லா
கல்வி உபகரணங்கள்
வழங்கும் விழா
மேயர்
திரு. S.A. சத்யா.
பங்கேற்பு
ஓசூர். ஜன. 5. –
மாண்புமிகு
முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின்
அவர்களின் ஆணைப்படி
இரண்டாவது பருவ
விடுமுறை முடிந்து ஜனவரி 5-ம் தேதி திங்கட்கிழமை
மூன்றாவது பருவம் தொடங்கிய முதல் நாளில் பள்ளிக்கு வருகை தந்த மாணவ, மாணவிகளுக்கு சீருடை, பாடபுத்தகங்கள் உள்ளிட்ட கல்வி பொருட்கள் வழங்கும் விழா
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட 3-வது வார்டு பேடரப்பள்ளியில் இயங்கி வரும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில்
மேயர்
திரு. S.A. சத்யா
அவர்கள் பங்கேற்று
மாணவ, மாணவிகளுக்கு சீருடை, பாடபுத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்கள், பரிசு பொருட்களை வழங்கி பாராட்டினார்.
மாவட்டத்தில் சிறந்த அரசுப்பள்ளி
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட
பேடரப்பள்ளி, 3-வது வார்டில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
தரமான கல்வி
இந்தப்பள்ளியில்1-வது வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை 900 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இங்கு தமிழ் மற்றும் ஆங்கில வழியில்
நல்லொழுக்கத்துடன்,
தரமான கல்வி கற்பிக்கப்படுகிறது.
மாணவர் சேர்க்கை அதிகரிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிகளில் சிறந்த பள்ளியாக பேடரப்பள்ளி அரசுப்பள்ளி விளங்கி வருவதால் மாணவர்கள் சேர்க்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
அதனால் இடப்பற்றாக்குறை காரணமாக மூன்று இடங்களில் இந்த அரசுப்பள்ளி இயங்கி வருகிறது.
மூன்றாவது பருவம்
ஜனவரி 5-ம் தேதி திங்கட்கிழமை
மூன்றாவது பருவம் முதல் நாளில் பள்ளிக்கு வருகை தந்த மாணவ, மாணவிகளுக்கு சீருடை, பாடபுத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு
தலைமையாசிரியர்
திரு. பொன்நாகேஷ்
தலைமை வகித்து பேசினார்.
அப்போது…
பேடரப்பள்ளி நடுநிலைப்பள்ளிக்கு
மாணவர்கள் அமர்ந்து சாப்பிடவும்,
பள்ளி விழாக்கள் நடத்தும் வகையிலும்
நிழல் தரும் மேற் கூறை அமைத்து தர வேண்டும்,
பள்ளிக்கு விளையாட்டு மைதானம்
ஏற்படுத்தி தர வேண்டும்.
மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து
வருவதால் கூடுதலாக
4 வகுப்பறைகள் கட்டிக்கொடுக்க வேண்டும்.
மாணவர்களின் இருசக்கர வாகனங்கள்
நிறுத்த வசதியாக
பள்ளி சுற்றுச் சுவரை ஒட்டியுள்ள கழிவுநீர் கால்வாய்க்கு மூடி அமைத்து தர வேண்டும்.
5 ஸ்மார்ட் போர்டுகள் அமைத்து தர வேண்டும்.
என மேயரிடம் கோரிக்கை வைத்தார்.
இந்த விழாவில்
சிறப்பு விருந்தினராக
மேயர்
திரு. S.A. சத்யா,
அவர்கள் பங்கேற்று
தேசியக்கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
மேயர் பேசும்போது...
தலைமையாசிரியரின் கோரிக்கைகளை
விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை
எடுப்பதாக உறுதியளித்தார்.
மேலும் மாணவ, மாணவிகள்
நல்ல ஒழுக்கத்துடன் நன்கு படிக்க வேண்டும் என்று கூறிய மேயர், இந்த ஆண்டு
தேசிய திறனாய்வு தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
விலையில்லா சீருடைகள்
1-வது வகுப்பு முதல் 8 -வது வகுப்பு வரை
பயிலும் மாணவ, மாணவிகளுக்கு
விலையில்லா
சீருடைகள்,
பாடபுத்தகங்கள்,
நோட்டு புத்தகங்களை
மேயர் வழங்கினார்.
பாராட்டு சான்றிதழ் - பரிசு
தொடர்ந்து 2-ம் பருவத்தில் தேர்வு எழுதி
முதல் மதிப்பெண்கள் பெற்ற
5-வது வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரையிலான
மாணவ, மாணவிகளுக்கு
பாராட்டு சான்றிதழ்கள், பரிசு பொருட்களை
மேயர் வழங்கி பாராட்டினார்.
100 சதவீதம் வருகை பதிவு
அதேபோல 2-ம் பருவத்தில் விடுப்பு எடுக்காமல்
100 சதவீதம் பள்ளிக்கு வருகை தந்த
மாணவ, மாணவிகளுக்கும்
பாராட்டு சான்றிதழ்கள் பரிசு பொருட்களை
மேயர் வழங்கி பாராட்டினார்.
வட்டார கல்வி அலுவலர்
திரு. அன்னையா
அவர்கள் பேசும் போது...
மாவட்டத்தில் உள்ள நடுநிலைப்பள்ளிகளில் கல்வியின் தரவகைபாடு குறித்து நடத்தப்படும் NMMS தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதில் பேடரப்பள்ளி நடுநிலைப்பள்ளி
மாணவர்கள் முன்னணியில்
திகழ்வதாக பாராட்டினார்.
இந்த விழாவில்
மாநகர மண்டல குழு தலைவர்
திரு. ரவி,
பெற்றோர் ஆசிரியர் கழக
துணை தலைவர்
திரு. முனி கிருஷ்ணன்.
பள்ளி மேலாண்மை குழு தலைவி
திருமதி. விஜி
பேடரப்பள்ளி 3-வது வார்டு நிர்வாகிகள்
திருமதி. சந்திரலேகா,
திரு. வீராரெட்டி,
திரு. S. வெங்கடசாமி,
திரு. ஆனந்தப்பா,
திரு. மாதப்பா,
திரு. தேவராஜ்,
திரு. லோகேஷ்ரெட்டி,
திரு. சிவா,
திருமதி. சரஸ்வதி
ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
விழா ஏற்பாடுகளை
தலைமையாசிரியர்
திரு. பொன்நாகேஷ்
சிறப்பாக செய்திருந்தார்.
நிலம் நன்கொடையாளர்
கவுரவிப்பு
பேடரப்பள்ளி நடுநிலைப்பள்ளிக்கு நிலம் நன்கொடையாக வழங்கிய வீராரெட்டி அவர்களுக்கு மேயர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
மேலும் பேடரப்பள்ளி அரசுப்பள்ளிக்கு வீராரெட்டி பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் தெரிவித்தார்.
முதலமைச்சருக்கு நன்றி
இந்த விழாவில்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் திட்டத்தை
வழங்கிய முதலமைச்சருக்கு
தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள்
நன்றி தெரிவித்தனர்.
TTK நிறுவனம் நன்கொடை
பேடரப்பள்ளி மாநகராட்சி
நடுநிலைப்பள்ளியில் 1-வது முதல் 8 வது வரை பயிலும் 900 மாணவ,மாணவிகளுக்கு
25 வகுப்பறைகள் உள்ளது.
இந்த பள்ளியில் ஆண்டுதோறும்
மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து
வருவதை கருத்தில் கொண்டு
பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகளை அமைக்க தலைமையாசிரியர் மற்றும் பிடிஏ குழுவினர், ஆசிரியர்கள் ஆகியோர்
நன்கொடைகளை பெற முயற்சி
மேற்கொண்டு வருகிறார்கள்.
அதன்பயனாக தற்போது பேடரப்பள்ளி
அரசுப்பள்ளியின் 2-வது மாடியில்
ஓசூர் TTK தனியார் நிறுவனம்
CSR நிதியின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பில்
3 வகுப்பறைகள் கட்டப்பட்டு வருவது
குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில்
ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
----------------------------.