கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சியில்
அப்பாவுப்பிள்ளை – பொன்னம்மாள்
அறக்கட்டளை சார்பில்
ஓசூர், தளி தொகுதிகளில்
10, 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண்
பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு
பரிசளிப்பு விழா
மாணவர்கள் அதிக அளவில்
ஐஏஎஸ் படிக்க முன்வர வேண்டும் –
தமிழக அரசின் முன்னாள்
முதன்மைச் செயலாளர்
அசோக் வரதன் ஷெட்டி.IAS. பேச்சு
ஒசூர். பிப். 25. -
ஓசூர் மாநகராட்சியில்
அப்பாவுப்பிள்ளை, பொன்னம்மாள் அறக்கட்டளை
சார்பில் நடைபெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவில், மாணவர்கள் அதிக அளவில் ஐஏஎஸ் படிக்க முன்வர வேண்டும் என தமிழ்நாடு அரசு முன்னாள் முதன்மைச் செயலாளர்
கே. அசோக் வரதன் ஷெட்டி.IAS.
தெரிவித்தார்.
கே.ஏ.பி. திருமண மண்டபம்
ஒசூர் கே.ஏ.பி. திருமண மண்டபத்தில் அப்பாவுப்பிள்ளை, பொன்னம்மாள் அறக்கட்டளை சார்பில், கடந்த ஆண்டு அரசு பள்ளியில் படித்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற ஒசூர், தளி தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
பிப்ரவரி 24-ம் தேதி நடந்த இந்த விழாவில்
முன்னாள் எம்.எல்.ஏவும், ஐஎன்டியூசி தேசிய செயலாளருமான
கே.ஏ.மனோகரன்
தலைமை வகித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசு முன்னாள் முதன்மைச்செயலாளர்
அசோக்வரதன் ஷெட்டி.IAS.
பங்கேற்று பேசியதாவது,
ஐஏஎஸ் தேர்வில் எளிதில்
வெற்றி பெற
மாணவர்கள் அதிக அளவில் ஐஏஎஸ் படிக்க முன் வர வேண்டும். மாணவர்கள் முயற்சி செய்தால் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறலாம். 12 - ஆம் வகுப்பு முடித்த 50 சதவிகிதம் மாணவர்கள் பொறியியல் துறையை தேர்வு செய்கின்றனர். 20 சதவிகிதம் பேர் மருத்துவ துறையைத் தேர்வு செய்கின்றனர்.
மற்றவர்கள் வழக்கறிஞர், கணக்காளர் உள்ளிட்ட பல துறைகளை தேர்வு செய்கின்றனர்.
தினமும் 10 மணி நேரம் படிப்பு
தினமும் தொடர்ந்து பத்து மணி நேரம்,
ஒரு ஆண்டுக்கு படித்தால் ஐஏஎஸ் தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம்.
ஆட்சியராக பணியில் இருக்கும் பொழுது மக்களுக்கு ஏராளமான
நலத் திட்டங்களை செயல்படுத்த முடியும்.
எந்தப் பள்ளியில் படிக்கிறோம் என்பது முக்கியமல்ல. மாணவர்கள் அரசு பள்ளியில் படித்தாலும் வாழ்க்கையில் முன்னேறலாம்.
ஒவ்வொருவரின் திறமையைக் கொண்டே அவரது வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள்.
.
மாணவர்கள் வாழ்வில் முன்னேற
50 சதவீதம் உங்களது முயற்சி,
25 சதவிகிதம் உங்களது திறமை,
25 சதவிகிதம் உங்களது அதிர்ஷ்டம்,
இருந்தால் வாழ்வில் முன்னேறலாம்.
1985 ல் ஒசூரில் சார் ஆட்சியராக பணியை துவக்கினேன்.
ஒசூரில் சார் ஆட்சியாக
இருந்த பொழுது
ஒரு ஆதிதிராவிட விவசாயி
என்னிடம் வந்து கோட்டையூரில்
எனக்கு 3 ஏக்கர் நிலத்திற்கு பட்டா வேண்டும் என கேட்டார்.
மறுநாளே பட்டா வழங்க நடவடிக்கை எடுத்தேன்.
ஆனால் அவர் அந்த பட்டாவை பெற 40 ஆண்டு காலமாக வருவாய் துறை அலுவலகத்திற்கு அலைந்துள்ளார், என்பதை கேட்டபோது அதிர்ச்சி அடைந்தேன்.
அதேபோன்று பெட்ட முகிலாளம் கிராமத்தில் 1800 ஏக்கர் அரசு தரிசு நிலம் இருந்தது. 1985 ல் நிலம் இல்லாத அனைத்து விவசாயிகளுக்கும் அரசு தரிசு நிலத்தை பட்டா போட்டு வழங்கிய பெருமை எனக்கு உண்டு.
இந்தியாவிலே ஒரு கிராமத்தில் நிலம் இல்லாத குடும்பமே இல்லை என்ற பெருமை பெற்ற கிராமம் பெட்டமுகிலாளம்.
மாரத்தான் ஓட்டம்
வாழ்க்கை என்பது ஒரு மாரத்தான் ஓட்டம் போன்றது. அதில் தடுக்கி விழுந்தால் கூட மீண்டும் எழுந்து ஓட வேண்டும். வாழ்வில் பல தடைகள் வரலாம். அந்த தடைகள் அனைத்தையும் தாண்டி வாழ்வில் வெற்றி பெற வேண்டும்.
வாழ்க்கை என்பது 100 மீட்டர் ஓட்டம் அல்ல, அது ஒரு மாரத்தான் ஓட்டம்
அதில் தடைகள் பல ஏற்படும்
அந்த தடைகளை தாண்டி வாழ்வில் வெற்றி பெற முடியும் என்றார்.
அமெரிக்கா தேர்தலில் ஐந்து முறை தோல்வியடைந்து,
அமெரிக்க அதிபரானார்
ஆபிரகாம் லிங்கன்,
நெல்சன் மண்டேலா,
44 வயது முதல் 71 வயது வரை
சிறையில் இருந்தார்.
ஆனால் அதன் பிறகு தான்
அவர் ஒரு நாட்டின் அதிபராக தேர்வானார்,
அவர் நோபல் பரிசு பெற்றார். எனவே முயற்சி செய்தால் அனைத்தையும் வெல்ல முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
147 மாணவர்களுக்கு பரிசு
விழாவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற 147 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை அசோக்வரதன் ஷெட்டி வழங்கினார்.
பரிசு பெற்ற மாணவர்களுக்கு
வழக்கறிஞர் சுவேதாஸ்ரீ
இலவச சட்டப் புத்தகங்களை வழங்கினார்.
இந்த விழாவில்
ஒசூர் எம்.எல்.ஏ.
ஒய்.பிரகாஷ்,
மாநகர மேயர்
எஸ்.ஏ.சத்யா,
அப்பாவுப்பிள்ளை, பொன்னம்மாள் அறக்கட்டளை செயலாளர்
ஜோதி பிரகாஷ்,
ஆடிட்டர் மணி,
சத்தியமூர்த்தி,
சுகாதாரக் குழுத் தலைவர்
மாதேஸ்வரன்
மாமன்ற மண்டலக் குழு தலைவர்
ரவி,
திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்
எல்லோரா.மணி,
மற்றும் ஐஎன்டியூசி நிர்வாகிகள்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.