கிருஷ்ணகிரி மாவட்டம்,
அஞ்செட்டி வட்டம்
அனைத்து கிராமப்புற பகுதிகளில்
2027 - மக்கள் தொகை கணக்கெடுப்பின்
முதல் கட்டமான வீட்டுப்பட்டியல்
மற்றும்
வீடுகள் கணக்கெடுப்பு
முன் சோதனை பணிகள்
2025 - நவ.10 முதல் நவ. 30 வரை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச. தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தகவல்.
ஓசூர். நவ. 6. –
2027 - மக்கள் தொகை கணக்கெடுப்பு
முதல்கட்டம்
வீட்டுப்பட்டியல் - வீடுகள் கணக்கெடுப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம்,
அஞ்செட்டி தாலுக்காவில் உள்ள
அனைத்து கிராமப்புற பகுதிகளில்
2027 - மக்கள் தொகை கணக்கெடுப்பின்
முதல் கட்டமான வீட்டுப்பட்டியல்
மற்றும்
வீடுகள் கணக்கெடுப்பிற்கான
முன் சோதனை பணிகள்
நவம்பர் 10 -ம் தேதி முதல் நவ. 30-ம் தேதி வரை
நடைபெற உள்ளது.
இதுகுறித்து
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச. தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
2027 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுவது குறித்து,
இந்திய அரசின் அறிவிப்பானது 16.06.2025 தேதியிட்ட மத்திய அரசின் அரசிதழில் (அறிவிப்பு எண். S.O. 2681) வெளியிடப்பட்டு,
அது 16.07.2025 தேதியிட்ட தமிழ்நாடு அரசிதழில் மீண்டும் வெளியிடப்பட்டது.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரி பகுதிகளில்
2027 ஆம் ஆண்டுக்கான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முன் சோதனையை நடத்த இருக்கிறது.
2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பானது
இந்தியாவின் முதல் முழுமையான டிஜிட்டல் கணக்கெடுப்பாகும்.
அதில் எதிர்நோக்கவிருக்கும் செயல்பாட்டு சவால்களைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய உதவும்.
முன் சோதனையின் போது,
மொபைல் செயலிகளைப் பயன்படுத்தி
தரவுகள் சேகரிக்கப்படுவதுடன்.
டிஜிட்டல் லே-அவுட் வரைபடங்களும் வரையப்படும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பு (CMMS)
வலைத் தளம் மூலம் இந்த முழு செயல்பாடுகளும் நிர்வகிக்கப்படும்.
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பின்
முதல் கட்டமான வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பிற்கான முன் சோதனை 10.112025 முதல் 30.112025 வரை நடைபெறவுள்ளது.
முன் சோதனைக்காக தமிழ்நாடு மாநில அரசுடன் கலந்தாலோசித்து மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அஞ்செட்டி தாலுக்கா, அனைத்து கிராமப்புற பகுதிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
அஞ்செட்டியிலுள்ள பொதுமக்கள் அனைவரும் முன் சோதனை மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு
அடையாள அட்டையுடன் வரும் கணக்கெடுப்பு அலுவலர்களுக்கு
அவர்கள் கேட்கும் அனைத்து விவரங்களையும் சரியாக தெரிவிக்க வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப
அவர்கள் தெரிவித்துள்ளார்.
--------------------------------.