கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
நாமல்பேட்டை கடை தெருவில்
மாநகராட்சி
ஆணையாளர்
திடீர் ஆய்வு
தடைசெய்யப்பட்ட
704 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்
ரூ.1லட்சம் அபராதம் விதிப்பு
ஓசூர். அக். 27. –
மாநகராட்சி நகர கடைகளில்
ஆணையாளர் ஆய்வு
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட நகரப்பகுதிகளில் உள்ள கடைகளில்
மாநகராட்சி ஆணையாளர் மேற்கொண்ட திடீர் ஆய்வுப்பணியில் 704 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, ரூ.1லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட நாமல்பேட்டை கடை தெருவில்,
மாநகராட்சி
ஆணையாளர்
திரு. Md. ஷபீர் ஆலம்,
அவர்களின் தலைமையில்,
மாநகர நல அலுவலர்
டாக்டர். அஜிதா
அவர்களின் முன்னிலையில்
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
704 கிலோ தடைசெய்யப்பட்ட
பிளாஸ்டிக் பறிமுதல்
ரூ. 1லட்சம் அபராதம்.
அப்பொழுது கிருஷ்ணா பேப்பர்ஸ் கடையில் சுமார் 704 கிலோ அளவில் பிளாஸ்டிக் பொருட்கள் மறைமுகமாக பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
கடை உரிமையாளருக்கு ரூ.1,00,000/- அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும்
அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பட்டியலை அனைத்து கடைகளிலும் வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து கடை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும்
பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறியப்பட்டால் அபராதம் விதிப்பதுடன்
பறிமுதல் செய்யப்பட்டு
கடையை பூட்டி சீல் வைக்கப்படும்
என ஆணையாளர் அவர்களால் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அனைத்து பிளாஸ்டிக் விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களுக்கு பிளாஸ்டிக் விற்பனை செய்வது குறித்த தெளிவுரை வழங்க கூட்டம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த ஆய்வு பணியின் போது துப்புரவு ஆய்வாளர்,
துப்புரவு மேற்பார்வையாளர்கள் உடன் இருந்தனர்.
------------------------------------.