ஓசூர் வட்டார வளர்ச்சி
அலுவலக கூட்டரங்கில்
இந்திய தர நிர்ணய அமைவனம்
பெங்களுரு கிளையின் சார்பில்
கிராம ஊராட்சி அளவில்
இந்திய தர நிலைகள் பயன்பாடு
குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம்
ஓசூர். டிச. 05. –
இந்திய தர நிர்ணய அமைவனத்தின் பெங்களுரு கிளை
ஓசூரில் இந்திய தர நிர்ணய
அமைவனத்தின் பெங்களுரு
கிளை சார்பில் கிராம ஊராட்சி அளவில் இந்திய தர நிர்ணய நிலைகளை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.
ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலகம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் நடந்த இந்த பயிற்சி முகாமுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி) சாந்தலட்சுமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி) வெங்கடேசன் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(சத்துணவு)
பத்மாவதி, ஆகியோர் தலைமை வகித்தனர்.
இந்திய தர நிர்ணய அமைவனம்
முன்னாள் இயக்குநர்
தாமரை செல்வன்
இந்த பயிற்சி முகாமில்
இந்திய தர நிர்ணய அமைவனம்
முன்னாள் இயக்குநர் தாமரை செல்வன் பங்கேற்று
பயிற்சி அளித்தார்.
ISI தரச்சான்றிதழ்
ISO தரச்சன்றிதழ்
இந்த பயிற்சியில்
இந்திய தர நிர்ணயம் தற்போது பொருட்களுக்கான தரத்தை முறைப்படுத்துதல்,
பொருட்களுக்கான ISI தரச்சான்றிதழ் வழங்குதல், ISO தரச்சன்றிதழ்
வழங்குதல், ஆய்வகத்தில் பொருட்களுக்கான தரத்தை உறுதி செய்தல், தங்க நகைகளுக்கான
ஹால் மார்க் தரச்சான்றிதழ் வழங்குதல்,
மற்றும் தங்கத்தின் தூய்மை தன்மையை உறுதிப்படுத்துதல், வெளி நாட்டு தயாரிப்புகளுக்கான தரச்சான்றிதழ் சேவை
வழங்குதல், மின்னணு மற்றும் தொழில் நுட்ப
சாதனங்களுக்கான பிஐஎஸ் தரச்சான்றிதழ்களுடன்
கூடிய கட்டாய பதிவு சான்றிதழ்கள் மற்றும் பிஐஎஸ் கேர் செயலின் பயன்பாடு குறித்தும்
விளக்கமாக எடுத்துரைத்து பயிற்சி அளித்தார்.
மேலும் இந்த பயிற்சியில், கிராம ஊராட்சி அளவில் பொருட்கள் வாங்கும் போது,
அரசு இ-சந்தையில், ISI தரச்சான்றிதழ்
மற்றும் கட்டாய சான்றிதழ் ஆகியவை உள்ளதா என்பதை பார்த்து பொருட்களை வாங்க வேண்டும்.
723 பொருட்களுக்கு - BIS கட்டாய தரச்சான்றிதழ் தேவை -
மத்திய அரசு அறிவிப்பு
தற்போது 723 பொருட்களுக்கு அரசு தரப்பில் BIS கட்டாய தரச்சான்றிதழ் தேவை என்று
மத்திய அரசு அறிவித்துள்ளது. வீட்டு உபயோக
எரிவாயு சிலிண்டர், தலைகவசம், சிமெண்ட், குக்கர், விளையாட்டு பொம்மைகள், காலணிகள், வாகனங்களின் டயர்கள், பால் பவுடர் போன்ற பொருட்களுக்கு கட்டாய தரச்சான்றிதழ் அறிவிக்கப்பட்டுள்ளது.
BIS Care செயலி
தரக்குறைபாடு உள்ள பொருட்கள் பற்றி
புகார்களை பிஐஎஸ் கேர் செயலின் உதவியுடன்
எளிதில் பதிவு செய்வது குறித்து இந்த முகாமில் பயிற்சி அளிக்கப்பட்டது.
BIS – ன் பணிகள்
இந்த பயிற்சியில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு
கிராம ஊராட்சி தேவையான பொருட்கள்,
செயல்முறைகள் மற்றும் சேவைகளின் தரத்தை வரையறுத்து தீர்மானிக்கும் பொறுப்பு BIS - க்கு உள்ளது. பொருட்கள், செயல்முறைகள் மற்றும்
சேவைகளுக்கான தரநிலைகளை உருவாக்குவதன் மூலம் BIS இதை செய்கிறது.
BIS உரிமம் பெறுவது கட்டாயம்
இந்திய அரசாங்கம் கட்டாயச் சான்றிதழின் கீழ்
723-க்கும் மேற்பட்ட பொருட்களை அறிவித்துள்ளது.
இந்த பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள்
BIS-யிடம் இருந்து கட்டாயமாக உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
ISI முத்திரை கட்டாயம்
மேலும், ISI முத்திரை இல்லாமல்
இந்த பொருட்களை விற்கவோ, சேமிக்கவோ, வெளிநாடுகளிலிருந்து
இறக்குமதி செய்யவோ இயலாது. இந்த தயாரிப்புகளில் ஏதேனும் ஒன்றை வாங்கும் போது,
BIS தரக்குறி மற்றும் CM/L - எண்ணை நீங்கள் சரிபார்க்க வேண்டும்.
இரண்டு இயற்கையான கேள்விகள் எழுகின்றன.
ஒரு தயாரிப்பு கட்டாயச் சான்றிதழின் கீழ் உள்ளதா, என்பதை எப்படி அறிவது, மற்றும்
CM/L - எண்
CM/L - எண் உண்மையானதா என்பதைக் கண்டு பிடிப்பது எப்படி ?. இதற்கு விடை காண,
BIS Care செயலியை ஆண்ட்ராய்டு மற்றும்
ஆப்பிள் ஃபோன்கள் இரண்டிலும் பதிவிரக்கம் செய்யலாம். இந்த செயலியை பயன்படுத்துவதன் மூலம் கட்டாயச் சான்றிதழின் கீழ் உள்ள பொருட்களின் முழுமையான பட்டியலைக்
காணலாம். மேலும் இந்த நோக்கத்துக்காக வழங்கப்பட்ட இடத்தில் உள்ள எண்ணைத் தட்டச்சு செய்வதன் மூலம் CM/L - எண்ணின் நம்பகத்தன்மையை சரிபார்க்கலாம்.
சிஎம்-எல் எண் தவறானது என கண்டறியப்பட்டால்
இந்தச் செயலியை பயன்படுத்தி ஒருவர் புகார் அளிக்கலாம்.
கட்டாயச் சான்றிதழின் கீழ் இல்லாத மற்ற பொருட்களும் கூட BIS -ஆல் சான்றளிக்கப்பட்டிருந்தால், அவற்றை பெற்று பயன்படுத்துவது சிறந்தது.
BIS உரிமம் பெறுவது எளிமை
உற்பத்தியாளர்கள் BIS-ல் உரிமம் பெறுவது
மிகவும் எளிமையானதாகும்.
BIS- சான்றளிக்கப்பட்ட பொருட்கள் மற்றும்
HUID கொண்டுள்ள தங்க நகைகளை பயன்படுத்துவதைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். மற்ற பொருட்களைப் போலவே
ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நகைகளின்
நம்பகத்தன்மையை BIS Care செயலியில்
இதற்காக வழங்கப்பட்டுள்ள இடத்தில் HUID எண்ணை இடுவதன் மூலமாக சரிபார்க்கலாம்.
BIS Care செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த மேலும் பலரை ஊக்குவிக்க வேண்டும்.
BIS இணையதளத்தை(www.bis.gov.in)
மிகவும் பயனுள்ளதாகவும், தகவல் தருவதாகவும் காணலாம். மேலும் தரநிலைகள் பற்றிய எந்த தகவலுக்கும் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
26 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள்
இந்த பயிற்சி முகாமில்
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் வட்டாரத்துக்குட்பட்ட
26 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலாளர்கள், இந்திய தர நிர்ணய அமைவனம், பெங்களுரு கிளையின் நிர்வாகி சிவகுமார்,
மாவட்ட வள பயிற்றுநர்
நிகோலஸ் பிரகாஷ்,
வட்டார வள பயிற்றுநர்
உமாமகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.