ஓசூர் மாநகராட்சி
28-வது வார்டு பகுதியில்
மேயர் ஆய்வு
ஓசூர். நவ.19 –
by Jothi Ravisugumar
மேயர் ஆய்வு
ஓசூர் மாநகராட்சி 28-வது வார்டில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து மேயர் ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட 28-வது வார்டில் உள்ள காந்தி நகர், கடவுள் நகர், வ.உ.சி நகர், ஆகிய குடியிருப்பு பகுதிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து மேயர் எஸ்.ஏ.சத்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
காந்திநகர், கடவுள்நகர்
வ.உ.சி நகர்
அப்போது அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து காந்தி நகர், கடவுள் நகர், வஉசி நகர் ஆகிய குடியிருப்புகளில் சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி, தெருவிளக்கு வசதி ஆகிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
மேலும் மண்டல குழு தலைவர் புருஷோத்தமரெட்டி, உதவி பொறியாளர் பிரபாகரன், குழாய் ஆய்வாளர் மற்றும் மின்கம்பியாளர் ஆகியோருக்கு உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது பகுதி செயலாளர் ராமு,
வட்ட கழக செயலாளர்கள் ராஜேந்திரன், சிவா,
கழக நிர்வாகிகள் திருப்பதி, அல்லாபாகஷ், அஸ்லாம், அந்தோணி, விஜி, மஞ்சு, தர்மசிங்,
சூரி, காவிரி, முனியப்பா மற்றும் பலர் உடனிருந்தனர்.