தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள்
வளர்ச்சிக் கழகம்,
கிருஷ்ணகிரி நகராட்சி,
இராயப்ப முதலிய நெருவில் உள்ள
ஜோஸ் பேலஸில்,
தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள்
வளர்ச்சிக் கழகம்,
சேலம் பூம்புகார் விற்பனை நிலையம் நடத்தும்
கைவினை கண்காட்சியை (Crafts Expo)
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் திறப்பு
கிருஷ்ணகிரி. டிச. 20. –
பூம்புகார் கைவினை கண்காட்சி
(Crafts Expo)
கிருஷ்ணகிரி நகராட்சி,
இராயப்ப முதலிய நெருவில் உள்ள
ஜோஸ் பேலஸில்,
தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள்
வளர்ச்சிக் கழகம்,
சேலம் பூம்புகார் விற்பனை நிலையம்
நடத்தும் கைவினை கண்காட்சியை (Crafts Expo)
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள்
19.12.2025 அன்று குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ-ஆ.ப,
அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசு நிறுவனமான
தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள்
வளர்ச்சிக் கழகம்
பூம்புகார்
என்ற பெயரில் அனைவராலும் அறியப்பட்டு
கைத்திறன் உலகில் தனியொரு
முத்திரை பதித்து செம்மையாக
செயல்படும் ஒரு நிறுவனம்.
நமது பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு இவைகளை கைவினை கலைகள் மூலம்
பேணி காப்பதோடு கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரமாகவும் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும்
அவர்களுக்கு பல விருதுகளை கொடுத்து
ஊக்குவிப்பது மற்றும் இக்கைவினை கலைகள்
அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு
செல்லும் ஓர் அரசு நிறுவனமாக
செயல்பட்டு வருகின்றது.
பூம்புகார் கண்காட்சி
கைவினை கலைஞர்களுக்கு சந்தை வாய்ப்பினை
ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கத்தோடும்,
பொதுமக்களுக்கு நேரடியாக
அவர்கள் விற்பனை செய்யும் வாய்ப்பாகவும்
பூம்புகார் நிறுவனம் கண்காட்சிகளை நடத்துகின்றது.
இவ்வாண்டும் பல சிறப்பு கண்காட்சிகளை
கைவினைஞர்களும் பொதுமக்களும்
பயன்பெறும் வகையில் நாடெங்கும் நடத்தி
வருவதோடு பண்டிகை காலங்களில்
விழாக்கால கண்காட்சிகளை செம்மையாக
நடத்தி வருகின்றது.
அதனைத்தொடர்ந்து,
இன்று கிருஷ்ணகிரி நகராட்சி,
இராயப்ப முதலிய தெருவில் உள்ள
"ஜோஸ் பேலஸில்"
பூம்புகார் விற்பனை நிலையம் சேலம் நடத்தும்
"கையினை கண்காட்சி (Crafts Expo)"
என்ற சிறப்பு கைவினைப் பொருட்கள்,
கைத்தறி, துணி வகைகள், அலங்கார நகைகள்
கண்காட்சி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இக்கண்காட்சி
19.12.2025 முதல் 28.12.2025 வரை
(ஞாயிறு உட்பட) நடைபெற உள்ளது.
இக்கண்காட்சியில்,
சுவாமிமலை பஞ்சலோக சிலைகள்,
நாச்சியார்கோவில் பித்தளை
குத்து விளக்குகள்,
பித்தளை கலை பொருட்கள்,
தஞ்சாவூர் கலைதட்டுகள்,
தஞ்சாவூர் கலை ஓவியங்கள்,
வெண்மர சிற்பங்கள்,
சந்தன மரச்சிற்பங்கள்,
சந்தனக் கட்டைகள்,
தூக்கமரம் பொருட்கள்,
நினைவு பரிசுகள்,
பலவித விளக்குகள்,
கருப்பு மற்றும் வெள்ளை
உலோக பொருட்கள்,
சென்ன பட்டணா பொம்மைகள்,
காகிதக்கூழ் பொம்மைகள்,
பயன்பாட்டு கைவினைப் பொருட்கள்,
கற்சிற்பங்கள்
மற்றும் ஏராளமான கைவினைப் பொருட்கள்
என அனைத்து கைவினை
கலைப்பொருட்களும்
இடம் பெற்றுள்ளன.
மேலும்,
கைத்தறி ரகங்களில் டாப்ஸ் வகைகள்,
பேன்சி சுடிதார் வகைகள்,
கலம் காரி பைகள்,
வண்ணம் அச்சிடப்பட்ட புடவைகள்,
பேன்சி சேலைகள்,
கைப்பைகள்,
படுக்கை விரிப்புகள்
போன்ற எண்ணற்ற வகையில் ஜவுளிகளும்,
முத்து, பவளம் மற்றும்
நவரத்தின மாலைகள்,
ராசிக்கற்கள்,
ஸ்படிக மணிமாலைகள்,
ருத்தராட்ச மணி மாலைகள்,
பஞ்சலோக மோதிரங்கள்,
வளையல்கள்,
செம்பு காப்பு,
கோமதி சக்கரம்,
கருங்காலி மாலைகள்,
பஞ்சலோக நகைகள்,
அகர் பத்திகள்,
வாசனைத் திரவியங்கள்
போன்ற பல வித மாலைகள் மற்றும்
பூஜை பொருட்கள் இடம் பெற்றுள்ளன.
10% சிறப்பு தள்ளுபடி
இக்கண்காட்சியில் குறைந்தபட்சமாக
ரூ.50 முதல் ரூ.1.52 இலட்சம் மதிப்பு வரையிலான கைவினை பொருட்கள் இடம் பெற்றுள்ளன.
இக்கண்காட்சியில் சுமார் ரூ.10 இலட்சம் வரை விற்பனை இலக்கு எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து பொருட்களுக்கும் 10% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும்.
அனைத்து கடன் (Debit & Credit) அட்டைகளுக்கும் எவ்வித சேவைக் கட்டணமும் இல்லை
மற்றும் யுபிஐ (UPI) பரிவர்த்தனைகள் மூலமும்
பண பரிமாற்றம் செய்துக் கொள்ளலாம்.
எனவே, பொதுமக்கள் இக்கண்காட்சியில்
காட்சிக்கும் விற்பனைக்கும்
பல்வேறு இடங்களில் இருந்து
வருவிக்கப்பட்ட அழகிய கைவினை
பொருட்களை வாங்கி
தங்கள் இவ்லத்திற்கு அழகூட்டி,
கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்யும்
கைவினைஞர்களின் வாழ்க்கைத்
தரத்தை உயர்த்த ஒத்துழைப்பு
வழங்க வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப
அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில்,
பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர்
திரு.நரேந்திரபோஸ்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்
திரு.சு.மோகன்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி)
திரு.அ.சு.ரமேஷ்
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்,
பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
-----------------------------------------------.