கெலமங்கலத்தில் அனைத்திந்திய
இளைஞர் பெருமன்றத்தின்
5-வது மாவட்ட மாநாடு
வாகனப் பேரணி
தளி எம்எல்ஏ பங்கேற்பு
ஓசூர். ஜனவரி. 04. –
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில்
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின்
பேரணி மற்றும் 5-வது மாவட்ட மாநாடு
நடைபெற்றது.
மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான
டி.ராமச்சந்திரன்
மாநாட்டையொட்டி நடந்த பிரம்மாண்டமான
வாகன பேரணியை இந்திய கம்யூனிஸ்ட்
மாவட்ட செயலாளரும், தளி சட்டப்பேரவை உறுப்பினருமான டி.ராமச்சந்திரன் தலைமை வகித்து, துவக்கி வைத்தார்.
கெலமங்கலம் கணேஷ் காலனியில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியில் ஏராளமான இருசக்கர
வாகனங்கள் மற்றும் ஆட்டோ ஆகியவற்றில்
கட்சி கொடி ஏந்தியபடி தொண்டர்கள்
பங்கேற்றனர்.
இந்த பேரணி கெலமங்கலம் பிரதான சாலையில்
பயணித்து இறுதியில் மாநாடு நடைபெறும் கூட்ரோடு தனியார் மண்டபத்தை அடைந்தது.
அதைத்தொடர்ந்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் 5-வது மாநாடு தொடங்கியது.
இதில் மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான
டி.ராமச்சந்திரன் தலைமை வகித்து
துவக்கவுரை ஆற்றினார்.
மாநில நிர்வாகக்குழு
எம். லகுமைய்யா
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில
நிர்வாகக்குழு எம். லகுமைய்யா வாழ்த்துரை
வழங்கினார். ஏஐஒய்எப் மாநில செயலாளர்
க.பாரதி மாநாட்டு கொடியேற்றி வைத்தார்.
மற்றும் நிறைவுரை ஆற்றினார்.
ஏஐஒய்எப் மாநகர தலைவர் நூரு
நன்றி கூறினார்.
மாவட்ட பொறுப்பாளர்கள்
இந்த மாநாட்டில் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள்
தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட தலைவராக சி.அன்பரசன்,
மாவட்ட செயலாளராக எஸ்.ஆதில்.
மாவட்ட பொருளாளராக பி.சண்முகம்,
மாவட்ட துணைத் தலைவர்களாக
ஏ.கோகுல்ராஜ், பி.அருண்,
மதகொண்டப்பள்ளி மது மற்றும்
மாவட்ட துணைச் செயலாளராக
வெ.நிரூபன், எஸ்.சக்தி, எஸ்.சாகுல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர். அவர்களை எம்எல்ஏ
டி.ராமச்சந்திரன் அறிமுகப்படுத்தினார்.
தீர்மானங்கள்
இந்த மாநாட்டில் போதை பொருட்கள்
விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சாதி ஆணவ படுகொலையை தடுக்க வேண்டும்.
கட்டணம் இல்லாத கல்வியை வழங்கி படித்த அனைத்து இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பை வழங்கவேண்டும். அனைத்து தரப்பினருக்கும்
இலவச உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் மாவட்ட செயலாளர் ஆதில், மாநில துணைத்தலைவர் திருப்பதி, சிபிஐ மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயராமன் மற்றும்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும்
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர்
திரளாக கலந்து கொண்டனர்.