தேசிய சாலை பாதுகாப்பு மாதம்
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை
கிருஷ்ணகிரி கோட்டம்
தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தின் சார்பில்
கொலமங்கலம் பேரூராட்சியில்
தேசிய சாலை பாதுகாப்பு மாதம்
(01-01-2026 முதல் 31-01-2026 )
சாலை பாதுகாப்பு
விழிப்புணர்வு பேரணி
டிஎஸ்பி ஆனந்தராஜ்.
கொடியாசைத்து தொடங்கி வைத்தார்.
ஓசூர். ஜன. 9. –
தேசிய சாலை பாதுகாப்பு மாதம்
01-01-2026 முதல் 31-01-2026 வரை
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை
கிருஷ்ணகிரி கோட்டம்
தேன்கனிக்கோட்டை
உட்கோட்டத்தின் சார்பில்
தேசிய சாலை பாதுகாப்பு மாதம்
01-01-2026 முதல் 31-01-2026 வரை
கடைப்பிடிப்பதையொட்டி
ஜனவரி 9-ம் தேதியன்று
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
பேரணி நடைபெற்றது.
கெலமங்கலம் நான்கு முனை
சந்திப்பிலிருந்து புறப்பட்ட
இந்த பேரணிக்கு தேன்கனிக்கோட்டை
உதவிகோட்ட பொறியாளர்
திருமதி. கவிதா
அவர்கள் தலைமை வகித்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக
தேன்கனிக்கோட்டை காவல் துறை
துணை கண்காணிப்பாளர்
திரு.ஆனந்தராஜ்
அவர்கள் பங்கேற்று
கொடியசைத்து பேரணியை
துவக்கி வைத்தார்.
காவல் ஆய்வாளர்
திரு.சங்கர்.
உதவி பொறியாளர்
திரு. நவீன்குமார்.
இளநிலை பொறியாளர்
திரு. டேவிட்.
கெலமங்கலம் அரசு பல்வகை
தொழில்நுட்ப கல்லூரி முதல்வர்
திரு. கோவிந்தராஜ்.
ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
வாகன ஓட்டிகளுக்கு
தலைக்கவசம் வழங்கி விழிப்புணர்வு
இந்த பேரணியின் போது
தலைக்கவசம் அணியாமல்
வாகனம் ஓட்டிச் சென்ற
வாகன ஓட்டிகளுக்கு
நெடுஞ்சாலைத்துறை சார்பில்
தலைக்கவசம் வழங்கி
பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
பரிசு வழங்கி பாராட்டு
மேலும்
தலைக்கவசம்
மற்றும்
சீட் பெல்ட்
அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு
பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு பேரணியில்
அரசு பல்வகை தொழில்நுட்ப
கல்லூரி ஆசிரியர்கள்,
மாணவ, மாணவிகள் மற்றும்
நெடுஞ்சாலைத்துறை
சாலை ஆய்வாளர்கள்,
சாலை பணியாளர்கள்,
ஊழியர்கள்,
திரளாக பங்கேற்று
விழிப்புணர்வு வாசகங்கள்
எழுதப்பட்ட
பதாகைகளை ஏந்தி
விழிப்புணர்வு முழக்கமிட்டபடி
பேரணியாக சென்றனர்.
துண்டு பிரசுரம் விநியோகம்
மேலும் சாலை விதிகளை கடைபிடிக்க
வலியுறுத்தி அச்சிடப்பட்ட
துண்டு பிரசுரங்களையும் கொடுத்து
விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நினைவு பரிசு
நிறைவாக நெடுஞ்சாலை துறை சார்பில் பங்கேற்றவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
இந்த பேரணி
கெலமங்கலம் – தேன்கனிக்கோட்டை
சாலையில் பயணித்து
பேருந்து நிலையம் – காவல் நிலையம்
வழியாக சென்று இறுதியில்
கெலமங்கலம் அரசு ஆண்கள்
மேல்நிலைப்பள்ளி முன்பு நிறைவடைந்தது.
இந்த பேரணியில்
சாலை ஆய்வாளர்கள்
திரு. முருகேஷ்,
திரு. லட்சுமணன்,
திரு. பெருமாள்,
திரு. கோவிந்தசாமி,
திரு. பழனிவேலன்.
மற்றும் பலர் பங்கேற்றனர்.
-----------------------------------.