வலிமைமிக்க குடும்ப அமைப்பு
ஒரு சமூகத்தையும்,
நாட்டையும்
எந்த வகையில்
வலிமையடைய உதவுகிறது
என்பதை உணர்த்தும்
சர்வதேச குடும்ப தினம்
மே – 15 –
சர்வதேச குடும்ப தினம்
International Day of Families
"நிலையான வளர்ச்சிக்கான குடும்பம் சார்ந்த கொள்கைகள்: சமூக மேம்பாட்டுக்கான இரண்டாவது உலக உச்சி மாநாடு 2025 ஐ நோக்கி" “Family-Oriented Policies for Sustainable Development: Towards the Second World Summit for Social Development 2025”
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். மே. 15. –
ஐக்கிய நாடுகளின் சபை,
1993-ம் ஆண்டு குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தையும் சமூக முன்னேற்றத்தையும் ஊக்கப்படுத்துவதற்கான
தீர்மானத்தை பொது மாநாட்டில் நிறைவேற்றியது.
அதன்படி,
1994-ல் மே 15-ம் தேதியை சர்வதேச குடும்ப தினமாக அறிவித்தது.
அதன்படி, ஆண்டுதோறும் மே 15-ம் தேதி சர்வதேச குடும்ப தினமாக உலகமெங்கும் கொண்டாடப்பட்டுவருகிறது.
ஒவ்வோர் ஆண்டும் ஒரு தீம்.
இந்த ஆண்டின்
உலகளாவிய கருப்பொருள்,
"நிலையான வளர்ச்சிக்கான குடும்பம் சார்ந்த கொள்கைகள்: சமூக மேம்பாட்டுக்கான இரண்டாவது உலக உச்சி மாநாடு 2025 நோக்கி",
குடும்பங்களை வளர்ச்சியின் மையத்தில் வைக்கும் கொள்கைகளை உருவாக்கி ஆதரிப்பதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
சர்வதேச குடும்ப தினம்
எதற்காகக்
கொண்டாடப்படுகிறது?
சர்வதேச குடும்ப தினத்தை கொண்டாட இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு.
குடும்ப அமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு மற்றும் இந்த அமைப்பை எதிர்மறையாக பாதிக்கும் பல்வேறு பாதிப்புகள்.
குடும்ப அமைப்பு என்பது உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள சமூகத்தின் ஒரு முக்கிய சக்தியாக உறுதி செய்யப்படுகிறது.
பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் பற்றியும், அந்த பாதிப்பை சரிசெய்ய தனி நபர், சமூகம் மற்றும் அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் இந்த நாளில் வெளிச்சம் போட்டு காட்டப்படுகிறது.
வலிமைமிக்க குடும்ப அமைப்பு ஒரு சமூகத்தையும் நாட்டையும் எந்த வகையில் வலிமையடைய உதவுகிறது என்பதையும் இந்த தினம் வெளிப்படையாக உணர்த்துகிறது.
-----------------------------------------.