மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
மற்றும்
குடும்ப நலத்துறை
கிருஷ்ணகிரி மாவட்டம்
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக,
126 மாற்றுத்திறனாளிகளுக்கு
ரூ.7 லட்சத்து 88 ஆயிரத்து, 601 மதிப்பில்
நலத்திட்ட உதவிகள் மற்றும்
குடும்ப நலத்துறை சார்பாக,
உலக வாசக்டமி (NSV)
இருவார விழாவையொட்டி,
வாசக்டமி விழிப்புணர்வு ரதம் பவனி
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் பங்கேற்பு
ஓசூர். டிச. 01. –
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்
அலுவலக கூட்டரங்கில் நடந்த
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக,
126 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 88
ஆயிரத்து, 601 மதிப்பிலான நலத்திட்ட
உதவிகள் வழங்கும் நிகழ்வு
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தலைமையில் டிசம்பர் 1-ம் தேதியன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில் இன்று (01.12.2025) நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம்,
வீட்டுமனைப் பட்டா,
விலையில்லா தையல் இயந்திரம்,
சலவைப் பெட்டி,
முதியோர் உதவித்தொகை,
சாலை வசதி மற்றும் மின் இணைப்பு
போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து
352 மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட
மனுக்களில் தகுதியான மனுக்கள் மீது
துறை சார்ந்த அலுவலர்கள் உடனடி
நடவடிக்கை எடுக்கவும்,
தகுதியில்லாத மனுக்களுக்கு
உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு
தெரிவிக்க வேண்டும் என
துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
தொடர்ந்து,
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள்,
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக,
பார்வை திறன்
பாதிக்கப்பட்டோருக்கான திறன்பேசி
வழங்கும் திட்டத்தின் கீழ்,
தலா ரூ.14,490 வீதம்
51 மாற்றுத்திறனாளிகளுக்கு
ரூ.7 லட்சத்து 38 ஆயிரத்து 990 மதிப்பில்
திறன் பேசிகளும்,
பார்வைத்திறன் பாதிக்கப்பட்டோருக்கு
தலா ரூ.1,735 வீதம்
12 மாற்றுத்திறனாளிகளுக்கு
ரூ.20,820 மதிப்பில்
பிரெயிலி வாட்ச் மற்றும்
தலா ரூ.457 வீதம் 63 மாற்றுத்திறனாளிகளுக்கு
ரூ.28,791 மதிப்பில் கருப்பு கண்ணாடி,
மடக்கு குச்சி
என மொத்தம் 126 மாற்றுத்திறனாளிகளுக்கு
ரூ.7 லட்சத்து 88 ஆயிரத்து, 601 மதிப்பில்
நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
உலக வாசக்டமி(NSV) இருவார விழா
விழிப்புணர்வு ரதம்
முன்னதாக, மாவட்ட ஆட்சியர்
அலுவலக வளாகத்தில்,
குடும்ப நலத்துறை சார்பாக,
உலக வாசக்டமி (NSV) இருவார
விழாவையொட்டி,
வாசக்டமி விழிப்புணர்வு இரதத்தை
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இக்கூட்டத்தில்,
மாவட்ட வருவாய் அலுவலர்
திரு.அ.சாதனைக்குறள்,
மாவட்ட ஆட்சியரின்
நேர்முக உதவியாளர் (பொது)
திரு.கோபு,
துணை இயக்குநர் (குடும்பநலம்)
மரு.பாரதி
மற்றும்
துணை ஆட்சியர்கள்,
அனைத்து துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
------------------------------------.