ஓசூர் மாநகராட்சி 22-வது வார்டு
முனீஸ்வரன் நகரில்
பொங்கல் பரிசுத் தொகுப்பு
வழங்கும் விழா
ஓசூர். ஜனவரி. 10. –
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட 22-வது வார்டு
முனீஸ்வரன் நகரில் உள்ள நியாய விலைக்கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை மாமன்ற பொது சுகாதாரக்
குழு தலைவர் மாதேஸ்வரன் வழங்கினார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 22-வது வார்டு
முனீஸ்வரன் நகரில் உள்ள நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது.
ஓசூர் மாநகராட்சி பொது சுகாதார குழு
தலைவர் மாதேஸ்வரன்
இதில் ஓசூர் மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவரும், 22-வது வார்டு
திமுக கவுன்சிலருமான மாதேஸ்வரன் தலைமை வகித்து பொங்கல் பரிசு தொகுப்பில் அடங்கியுள்ள
அரிசி, கரும்பு, சர்க்கரை மற்றும் இலவச வேட்டி, சேலை ஆகியவைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்த விழாவில் ஓசூர் முனீஸ்வரன்நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் பிரகாஷ், திமுக வார்டு செயலாளர் ஆறுமுகம், குடியிருப்போர் சங்க செயலாளர் ரவி,
மாவட்ட திராவிட கழக தலைவர் வனவேந்தன், திமுக நிர்வாகிகள் வருண், அப்சரா, யசோதாராணி, முத்துக்குமார்,
ஜெயபிரகாஷ், காளிமுத்து, தேவராஜ், ரவி, கிஷோர் உட்பட பலர் பங்கேற்றனர்.