கிருஷ்ணகிரி மாவட்டம்
மகாத்மா காந்தி,
ஜவகர்லால் நேரு
ஆகியோரின் பிறந்தநாளையொட்டி,
2025 – நவ. 12, 13-ம் தேதி ஆகிய 2 நாட்களில்,
பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு
பேச்சுப்போட்டிகள்,
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தகவல்.
ஓசூர். நவ. 6. –
தமிழ் வளர்ச்சித் துறை
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்
மகாத்மா காந்தி,
ஜவகர்லால் நேரு
ஆகியோரின் பிறந்தநாளையொட்டி,
2025 – நவ. 12, 13, ஆகிய 2 நாட்களில்,
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு
பேச்சுப்போட்டிகள் நடைபெறுகிறது.
இதுகுறித்து
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு அரசு. தமிழ் வளர்ச்சித் துறையின்
2021-22 ஆம் ஆண்டிற்கான மானியக்
கோரிக்கையின் அறிவிப்பிற்கிணங்க,
கிருட்டினகிரி மாவட்டத்தில்
மகாத்மா காந்தி,
ஜவகர்லால் நேரு
ஆகியோரின் பிறந்தநாளையொட்டி,
பேச்சுப்போட்டிகள்
முறையே 2025 நவ.12,13, ஆகிய 2நாட்களில்
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு
கிருட்டினகிரி மாவட்ட ஆட்சியர்
அலுவலகக் கூட்டரங்கில்
காலை 09.30 மணி முதல் நடைபெற உள்ளது.
மகாத்மா காந்தி பிறந்த நாள்
பேச்சுப்போட்டியில்
பள்ளி மாணவர்களுக்கான தலைப்பு.
1 காந்தியடிகளின் வாழ்க்கைச் சுவடுகள்,
2 வாய்மையே வெல்லும்,
3. தீண்டாமையும் காந்தியடிகளும்.
கல்லூரி மாணவர்களுக்கான தலைப்பு
1 வாழ்விக்க வந்த எம்மான்.
2. அண்ணல் காந்தியடிகளின் அரசியல் வேள்வி,
3. தில்லையாடி வள்ளியமையும் காந்தியடிகளும்.
ஜவகர்லால் நேரு பிறந்த நாள் பேச்சுப்போட்டியில்,
பள்ளி மாணவர்களுக்கான தலைப்பு-
1. ஜவகர்லால் நேருவின் சாதனைகள்,
2. விடுதலை போரில் நேருவின் பங்களிப்பு,
3.அமைதிப் புறா -நேரு.
கல்லூரி மாணவர்களுக்கான தலைப்பு
1. நவீன இந்தியாவின் சிற்பி,
2. நேரு பதித்த சுவடுகள்.
3. நேருவின் வெளியுறவுக் கொள்கை.
பரிசுத்தொகை
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில்
முதல் பரிசுத் தொகை ரூ.5000/-,
இரண்டாம் பரிசுத் தெகை ரூ.3,000/-
மூன்றாம் பரிசாக ரூ.2000/-
மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பெறும்.
மேலும் அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்கு
சிறப்புப் பரிசுத் தொகை
ரூ.2000/- வீதம் வழங்கப்பெற உள்ளது.
கிருட்டினகிரி மாவட்டத்தில் உள்ள
கல்லூரி மாணவ, மாணவிகள்
கல்லூரி கல்வி இணை இயக்குநர் வாயிலாக அனுப்பியுள்ள படிவத்தில் அந்தந்த கல்லூரி முதல்வரிடமும்,
பள்ளி மாணவ, மாணவிகள்
முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக அனுப்பியுள்ள படிவத்தில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடமும்
அனுமதி பெற்று பேச்சுப் போட்டியில் பங்கேற்கலாம்.
எனவே கிருட்டினகிரி மாவட்டத்தில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் இப்போட்டிகளில் பங்கேற்று பயன்பெறலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்துள்ளார்.
------------------------------------------.