செவன்த் டே அட்வென்டிஸ்ட்
இன்டர்நேஷனல் அகடமி பள்ளி
கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை வட்டம்
கெலமங்கலம் பேரூராட்சி
செவன்த் டே அட்வென்டிஸ்ட்
இன்டர்நேஷனல் அகடமி பள்ளி
மாணவர்கள் பங்கேற்ற
ஆரோக்கியமற்ற உணவை தவிர்ப்போம்
விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஓசூர். நவ. 20. –
ஆரோக்கியமற்றை உணவை தவிர்ப்போம்
( Say No To Junk Food)
விழிப்புணர்வு நிகழ்ச்சி
கெலமங்கலம் பகுதியில் இயங்கி வரும்
செவன்த் டே அட்வென்டிஸ்ட்
இண்டர்நேஷனல் அகடமி பள்ளியில்
ஆரோக்கியமற்றை உணவை தவிர்ப்போம்
( Say No To Junk Food)
என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை வட்டம்
கெலமங்கலம் பேரூராட்சி அருகே உள்ள
எச்.செட்டிப்பள்ளி
கிராமத்தில்
செவன்த் டே அட்வென்டிஸ்ட்
இன்டர்நேஷனல் அகடமி பள்ளி
இயங்கி வருகிறது.
இந்தப்பள்ளியில் சிறந்த பயிற்சி பெற்ற
ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களுக்கு
தரமான கல்வி கற்பிக்கப்படுகிறது.
இந்த தனியார் பள்ளியில்
நவ. 20-ம் தேதியன்று
ஆரோக்கியமற்ற உணவை தவிர்ப்போம்
( Say No To Junk Food)
என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் தலைமை வகித்தார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில்
பெற்றோர் பங்களிப்புடன்
பள்ளி மாணவ, மாணவிகள்
அழகிய வண்ணமயமான ஆடையணிந்து,
ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
விழிப்புணர்வு நாடகம்
இந்த நிகழ்வில் ஆரோக்கியமற்ற உணவை
தவிர்ப்போம் என்ற தலைப்பில்
துரித உணவு மூலமாகவும்,
Junk Food மூலமாகவும் மனித வாழ்வில்
ஏற்படக்கூடிய பாதிப்புகளை
விளக்கும் வகையில்
விழிப்புணர்வு கருத்துக்களுடன்
வடிவமைக்கப்பட்ட நாடகம் நடந்தது.
ஆரோக்கியமற்ற
உணவுப்பொருட்களின் சித்திரம்
இதில் மாணவ, மாணவிகள் ஆரோக்கியமற்ற
உணவுப்பொருட்களை குறிக்கும் வகையில்
பல்வேறு உணவுப்பொருட்களின் சித்திரங்களை
அணிந்து மேடையில் தோன்றி
தத்ரூபமாக நடித்து,
விழிப்புணர்வை ஏற்படுத்தி,
அனைவரையும் கவர்ந்தனர்.
சமுதாயத்திற்கு
விழிப்புணர்வு செய்தி
இந்த நிகழ்ச்சி ஒரு சாதாரணமான
விழிப்புணர்வு நிகழ்ச்சியாக இல்லாமல்,
சமுதாயத்திற்கு உரக்க சொல்லக்கூடிய விழிப்புணர்வு செய்தியாகவும் இருந்தது.
அதைதொடர்ந்து
மாணவ, மாணவிகள் பங்கேற்ற நடனம் உள்ளிட்ட
கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில்
பெற்றோர் பங்களிப்புக்காக
பள்ளியின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில்
ஆசிரியர்கள்,
மாணவ, மாணவிகள்,
பெற்றோர்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.
--------------------------.