ஜோதி தமிழ்
செய்திகள்
இணைய இதழ்
மலர்- 1. இதழ்கள் - 284
ஓசூர் ரோட்டரி கிளப்
லெஜெண்ட்ஸ் சார்பில்
அனுசோனை அரசுப்பள்ளிக்கு
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்
இயந்திரம் நன்கொடை
செய்தி ஆசிரியர் - ஜோதி ரவிசுகுமார்,M.A.
ஓசூர் ரோட்டரி கிளப்
லெஜெண்ட்ஸ் சார்பில்
அனுசோனை அரசுப்பள்ளிக்கு
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்
இயந்திரம் நன்கொடை
செய்தி ஆசிரியர் - ஜோதி ரவிசுகுமார்,M.A.
கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை வட்டம்
அனுசோனை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு
ஓசூர் ரோட்டரி கிளப் லெஜெண்ட்ஸ் சார்பில்
சுத்திகரிக்கப்பட்ட
குடிநீர் இயந்திரம் நன்கொடை
ஓசூர். ஜுலை. 9. –
அனுசோனை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு
ஓசூர் ரோட்டரி கிளப் லெஜெண்ட்ஸ் சார்பில்
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம்
நன்கொடையாக வழங்கப்பட்டது.
அனுசோனை ஊராட்சி
ஒன்றிய நடுநிலைப்பள்ளி
தேன்கனிக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட அனுசோனை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வேண்டுகோளின்படி
இருதாளம் கிராமத்தைச் சேர்ந்த
ஓசூர் ரோட்டரி கிளப் லெஜெண்ட்ஸ்
உறுப்பினர்
திரு.லட்சுமிபதி
அவர்களின் பரிந்துரையின் பேரில்,
அனுசோனை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு
மாணவர்கள் பயன்பாட்டிற்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் நன்கொடையாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில்
தலைமை ஆசிரியர்
ஷாமண்ணா,
சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தி வரவேற்றார்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக
ரோட்டரி கிளப் தலைவர் ஜெயக்குமார்,
செயலாளர் யுவராஜ்,
உதவி ஆளுநர் ஆனந்த ராஜாமணி,
இயந்திரத்தை வழங்கிய
திருமதி.சபாங்கி செல்வகுமார்
ஆகியோர் பங்கேற்று அரசுப்பள்ளியில் நிறுவப்பட்டிருந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரத்தை மாணவர்களின் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து பேசிய
திருமதி.சபாங்கி செல்வகுமார்
அரசுப்பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரத்தை திறந்து வைத்தது தொடர்பாக தனது மகிழ்ச்சியை
தெரிவித்துக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து ரோட்டரி சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையில் சார்பில் பள்ளிகளில்
வாட்டர் பெல்
என்ற ஒரு முறையை அறிமுகப்படுத்துவதற்கு முன்னோடியாக ஆர்வமூட்டும் விதமாக ரோட்டரி கிளப் ஓசூர் லெஜெண்ட்ஸ் குழுவினர் இதனை கவனத்தில் கொண்டு, பள்ளிக்கு நன்கொடையாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரத்தை வழங்கியதற்கு தலைமையாசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் சார்பிலும் நன்றி தெரிவிப்பதாக
கணித ஆசிரியர் சுந்தரமூர்த்தி
நிறைவு உரையாற்றி பேசினார்.
--------------------------.