தமிழகத்தில்
லட்சக்கணக்கணக்கான இயற்கை விவசாயிகளை உருவாக்கிய
சாதனையாளர்
இயற்கை வேளாண் விஞ்ஞானி
நம்மாழ்வார்
ஏப்ரல் – 06 - 1938
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் 87 – வது பிறந்ததினம்.
தமிழக விவசாயத்தையும் விவசாயிகளையும் ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து விடுவிக்க போராடிய; இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். ஏப்ரல். 6. –
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு சிற்றூரில் (06 ஏப்ரல் 1938 )- ல் பிறந்தார்.
தந்தை பெயர் ச கோவிந்தசாமி. பள்ளிப்படிப்பை முடித்தபின் தந்தை மற்றும் சகோதர்களின் அறிவுரைப்படி விவசாயிகளுக்கு உதவும் வகையில் வேளாண்மை படிப்பை
தேர்ந்தெடுத்தார்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.
2007-ல் காந்திகிராம பல்கலைக்கழகம் அறிவியலில் கௌரவ முனைவர் பட்டம் தந்தது.
கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் 1960ஆம் ஆண்டு ஆய்வு உதவியாளராக பணியில் சேர்ந்து ஆய்வகங்களில் நிலவும் களப்பணியில் ஈடுபடாது செய்யப்படும், பயனில்லாப் பணிகளுக்கு எதிராக குரல் கொடுத்து மூன்றாண்டுகளில் வெளியேறினார்.
1963 ஆம் ஆண்டு முதல்
1969 ஆம் ஆண்டு வரை அவர் மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் வேலை செய்தார்.
அப்போது ரசாயன உரங்களால் மண்ணிற்கும், பயிர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை அறிந்த அவர், விவசாய முறையில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என முடிவு செய்து தனது அரசு வேலையை உதறினார் .
பின் அமைதிக்கான
நோபல் பரிசு பெற்ற
டோமினிக் பியர்
என்பவர் ஆரம்பித்த
Island of Peace
என்ற தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து அதன் மூலம் களக்காடு பகுதியில் அடித்தட்டு ஏழை விவசாயிகளுக்கு நவின விவசாய முறைகளில் விவசாயம் செய்வது, கூட்டுறவுக் கடன்கள் மூலம் கிணறுகள் அமைத்து அவர்களின் வாழ்வை உயர்த்துவது என்று இயங்கினார்.
ஆனால் பத்தாண்டுகள் முடிவில் விவசாயிகள் அதிக கடன் சுமையில் வீழ்ந்ததையும், நவீன விவசாயம் உத்திரவாதப்படுத்திய மேம்பட்ட வாழ்க்கை பொய்யுரையாக இருப்பதையும் அறிந்த அவர்
அங்கிருந்து விலகுகிறார்.
ஜப்பானிய சிந்தனையாளர் மற்றும் விவசாயி,
மசனோபு ஃபுக்குவோக்கா
(Masanabu Fukuoka)
ஈர்க்கப்பட்டு இயற்கை வேளாண் விஞ்ஞானி ஆனார், முனைவர் கோ.நம்மாழ்வார்.
ஐரோப்பிய நாடுகள் முழுக்க
பயணம் செய்தவர்
நம்மாழ்வார்.
நம் நாட்டு வேப்பிலைக்கான காப்புரிமையை பெற ஜெர்மனியில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி மீட்டு வந்தவர்.
டெல்டா மாவட்டத்தை சுடுகாடாக மாற்றும் திட்டமான
மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிராகவும்,
மரபணு மாற்று விதைகளுக்கு எதிராகவும்,
வேளாண் சட்டத்திற்கு எதிராகவும்
ஆர்ப்பாட்டம்,
உண்ணாவிரதம்,
நடைப்பயணம்
என பல விதமான போராட்டங்களை முன்னெடுத்தார்.
தன்னுடைய முயற்சியால் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும், இயற்கை விவசாயத்தை விதைத்தார். இதன் மூலமாக, லட்சக்கணக்கணக்கான இயற்கை விவசாயிகள் இன்றைக்கு உருவாகியுள்ளனர்.
இதுவரை குடும்பம், லீசா உள்ளிட்ட 250க்கும் மேலான என்.ஜி.ஓ.க்களை உருவாக்கியுள்ளார். இவரின் பணியை சிறப்பிக்கும் வகையில், 2007-ம் ஆண்டு திண்டுக்கல், காந்திக்கிராம கிராமியப் பல்கலைக்கழகம்
முனைவர் பட்டம்
வழங்கி கெளவரவித்தது.
தொடர்ந்து இயற்கை வேளாண் முறைகளை தமிழகத்தில் பிரபலப்படுத்துவற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். இதன் விளைவாக தற்போது தமிழகத்தில் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு பெருகியுள்ளது.
இயற்கை வேளாண்
விழிப்புணர்வுக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள
நம்மாழ்வார்,
தமிழக இயற்கை உழவர் அமைப்பு மற்றும்
தமிழ்நாடு சுற்றுச்சூழல் இயக்கம்
என்ற இயக்கங்களையும் நடத்தி வந்தார்
நம்மாழ்வார் சொன்ன நான்கு ரகசியங்கள்!
''உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால்,
நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம்
செலுத்த வேண்டும்.
ஒன்று... பசி வந்து
சாப்பிட வேண்டும்,
இரண்டு... தாகம் வந்து
தண்ணீர் அருந்த வேண்டும்,
மூன்று... சோர்வு வந்து
ஓய்வு எடுக்க வேண்டும்,
நான்கு... தூக்கம் வந்து
தூங்க வேண்டும்.’
இந்த நான்கு விஷயங்களும் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்கள்.
நோய் வந்த பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது;
மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆனால், நோய் வருவதற்கு முன் தங்களது உடலைக் காப்பதற்காக நேரம் செலவழிப்பது இல்லை.
உணவு,
நீர்,
காற்று...
இந்த மூன்றில் இருந்துதான் நம் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது.
இந்த மூன்றில் இருந்து தவறான விஷயங்கள் ஏதேனும்
உடலுக்குள் சென்றுவிட்டால்
தான் நோய் வருகிறது.
"தமிழின வாழ்வியல்
பல்கலைக்கழகம்'
என்ற அமைப்பினைத் தொடங்கி, தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள் எல்லாவற்றையும் கால்நடையாக எட்டி, அங்கு கருத்தரங்கங்களும், பயிற்சி வகுப்புகளும் நடத்தி வந்தவர்.
"பேரிகை' என்றொரு இயற்கை உழவாண்மை வாழ்வியல்
மாத இதழை வெளியிட்டார்.
நடைப் பயணங்கள்
1998 - கன்னியாகுமாரி - சென்னை - சுதேச பயிர் வளர்ப்பின் முக்கியத்துவத்திற்காக
2002 - 25 நாட்கள் பாத யாத்திரை ஈரோடு மாவட்டம் - அங்கக வேளாண்மைப் பிரச்சாரம்.
2003 - பூம்புகார் முதல் கல்லனை வரை 25 நாட்கள் - கரிம வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து பிரச்சாரம்.
உருவாக்கிய அமைப்புகள்
1979ல் குடும்பம்
1990 லிசா (1990 – LEISA Network)
1990 – மழைக்கான எக்லாஜிக்கள் நிறுவனம், கொலுங்கி, ஒடுகம்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம்
இந்திய அங்கக வேளாண்மை சங்கம் (Organic Farming Association of India)
நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்
நம்மாழ்வாரின் படைப்புகள் அனைவரும் கட்டாயமாக படிக்க வேண்டிய புத்தககங்கள்
1."உழவுக்கும் உண்டு வரலாறு"
விகடன் வெளியீடு
2."தாய் மண்ணே வணக்கம்" நவீன வேளாண்மை வெளியீடு
3."நெல்லைக் காப்போம்"
4."வயிற்றுக்குச் சோறிடல்
வேண்டும்"
5."இனி விதைகளே பேராயுதம் " இயல்வாகை வெளியீடு-9442593448,9942118080
6."நோயினைக் கொண்டாடுவோம் " இயல்வாகை வெளியீடு
7."எந்நாடுடையே
இயற்கையே போற்றி"
விகடன் வெளியீடு
8."பூமித்தாயே"(மிக முக்கியமான புத்தகம் கட்டாயம்
படிக்க வேண்டியது ) இயல்வாகை வெளியீடு
9."மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள்" (நூல்) வாகை வெளியீடு
10."களை எடு " கிழக்கு பதிப்பகம்
இயற்கை விவசாயத்தை கையில் எடுத்துக்கொண்டு,
கடந்த நாற்பதாண்டுகளாகத்
தமிழ் மண்ணில் முழங்கிக் கொண்டிருந்த
'இயற்கை வேளாண் விஞ்ஞானி'
கோ. நம்மாழ்வார்,
டிசம்பர் 30 அன்று இயற்கையோடு இயற்கையாகக் கலந்துவிட்டார்!
-----------------------------.