ஸ்ரீ அபய ஹஸ்த சுயம்பு
லட்சுமி நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில்
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் அருகே
அகரம் கொம்பேப்பள்ளி கிராமம்
ஸ்ரீ அபய ஹஸ்த சுயம்பு
லட்சுமி நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில்
சம்ரோக்ஷன மகா கும்பாபிஷேக விழா
ஆந்திர மாநிலத்தில் உள்ள
ஸ்ரீ அஹோபில மடம்
ஆதீனத்தின் 46 வது ஜீயர்
ஶ்ரீமதே ஶ்ரீவண் சடகோப
ஸ்ரீ ரங்கநாத யதீந்திர
மகா தேசிக ஸ்வாமிகள்
பங்கேற்பு
ஒசூர். ஜன. 29. -
ஸ்ரீஅபய ஹஸ்த சுயம்பு
லட்சுமி நரசிம்ம ஸ்வாமி
திருக்கோயிலில்
மகா கும்பாபிஷேகம் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் அருகே
அகரம் கொம்பேப்பள்ளி கிராமத்தில்
எழுந்தருளியுள்ள
ஸ்ரீ அபய ஹஸ்த சுயம்பு
லட்சுமி நரசிம்ம ஸ்வாமி
திருக்கோயிலில் நடந்த
மகா கும்பாபிஷேகம் விழாவில்
ஆந்திர மாநிலத்தில் உள்ள
ஸ்ரீ அஹோபில மடம்
ஆதீனத்தின் 46 வது ஜீயர்
ஶ்ரீமதே ஶ்ரீவண் சடகோப
ஸ்ரீ ரங்கநாத யதீந்திர
மகா தேசிக ஸ்வாமிகள்
பங்கேற்று சிறப்பிக்க
மகா கும்பாபிஷேக விழா
வெகு விமர்சையாக நடைபெற்றது.
கோயில் தல வரலாறு
கடந்த 2009 ஆம் ஆண்டு
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த
திரு. ராமகிருஷ்ண குப்தா
குடும்பத்தினர் தற்பொழுது திருக்கோயில் அமையப்பெற்றுள்ள
இந்தப் பகுதியில் உள்ள நிலங்களை
சமன் செய்து குடியிருப்பு பகுதிகளாக
மாற்றி விற்பனை செய்ய
முயற்சித்துள்ளனர்.
உடைக்க இயலாத
மிகப்பெரிய கருங்கல்
அப்போது குறிப்பிட்ட
ஒரு மிகப்பெரிய கருங்கல் மட்டும்
அந்த பகுதியில் இருந்து
உடைக்க இயலாமல்
பல்வேறு தடைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து உடைக்க இயலாத
அந்த பெரும் பாறாங்கல்லை
அப்புறப்படுத்திவிட்டு
நிலத்தை சமம் செய்து குடியிருப்பு பகுதிகளாக
மாற்றி விடலாம் என
ராமகிருஷ்ண குப்தா குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
சுயம்புவாக எழுந்தருளிய
ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி
இதைத்தொடர்ந்து
அந்த கல்லை எடுத்துச் செல்வதற்காக
கிரேன் வாகனம் மூலம் பலமுறை முயற்சித்தும்
குறிப்பிட்ட இடத்தில்
கல்லை அகற்ற முடியாமல்
கிரேன் வாகனத்தின்
பெல்ட் அறுந்து அதே பகுதியில்
பாறை அங்கேயே இருந்து விடுகிறது.
அகோபில மடம்
இதனால் நில உரிமையாளர்கள்
பல இடங்களில் ஜோசியங்கள் மற்றும்
கேரளாவில் பிரசன்னம் ஆகிய கேட்டதில்
அந்த இடத்தில்
சுயம்புவாக ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி
எழுந்தருளி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதேபோல
அகோபில மடத்திலும்
இது தொடர்பாக கூறி
இந்தப் பகுதிக்கு மடத்தின் நிர்வாகிகள்
வந்து பார்த்தபொழுது
லட்சுமி நரசிம்ம சுவாமி சுயம்புவாக
எழுந்தருளி
இருப்பது தெரியவந்துள்ளது.
கோயில் கட்ட
நிலம் தானம்
இந்நிலையில்
ராமச்சந்திர குப்தா
என்பவர் காலமாகிவிட்ட நிலையில்
அவரது மகன்
திரு. லோக்நாத் குப்தா
குறிப்பிட்ட இடத்தில்
ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு
திருக்கோயில் எழுப்புவதற்காக
சுமார் 1.25 ஏக்கர் நிலத்தை
அகோபில மடத்திற்கு தானமாக
வழங்கியுள்ளார்.
அறக்கட்டளை
இதைத்தொடர்ந்து
அந்த ஊர் பொதுமக்கள் மற்றும் மடத்தின்
நிர்வாகிகள் உள்ளிட்டோர்
அறக்கட்டளையை ஏற்படுத்தி
கருடாழ்வாருக்கும்
ஸ்ரீ அபய ஹஸ்த சுயம்பு லட்சுமி
நரசிம்ம சுவாமிக்கும்
கருங்கல்லால் பிரம்மாண்ட
திருக்கோயில் புதிதாக கட்டப்பட்டது.
மகா கும்பாபிஷேக விழா
இதற்கான கும்பாபிஷேக விழா
நடத்துவதற்கான உற்சவம்
ஜனவரி 27-ம் தேதி துவங்கி யாகசாலை பூஜை மற்றும் சுதர்சன ஹோமங்கள் நடத்தப்பட்டன.
புனித நீர்
தொடர்ந்து ஜனவரி 28-ம் தேதி காலை
பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை யாகசாலையில் வைத்து
சிறப்பு ஹோமங்கள்
நடத்தப்பட்டதை தொடர்ந்து
பூரண ஆகுதி சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த கும்பாபிஷேகத்தை
நடத்துவதற்காக
ஆந்திர மாநிலத்தில் உள்ள
ஸ்ரீ அஹோபில மடம்
ஆதீனத்தின் 46 வது ஜீயர்
ஶ்ரீமதே ஶ்ரீவண் சடகோப
ஸ்ரீ ரங்கநாத யதீந்திர
மகா தேசிக ஸ்வாமிகள்
வருகை தந்து மகா கும்பாபிஷேகத்தை
துவக்கி வைத்தார்.
இதை எடுத்து
புனித நீர் அடங்கிய கலசங்கள் கோபுர விமானத்தின் மீது வேத மந்திரங்கள் முழங்க எடுத்துச் செல்லப்பட்டு,
அங்குள்ள விமான கோபுர கலசத்தின்
மீது ஊற்றி சம்ரோக்ஷன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதன் பின்னர்
மூலவர் லட்சுமி நரசிம்ம சுவாமி
மற்றும்
உற்சவம் மூர்த்திகளுக்கு
மங்களா சாசனம் ஆகியன செய்யப்பட்டு
சுவாமிக்கு மகா மங்களாரத்தி
தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டு
பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில்,
பிஜேபி பிரமுகர்
திரு. பாலகிருஷ்ணன்,
தமிழக வெற்றிக் கழக பிரமுகர்கள்
திரு. ஹேம்நாத் சம்பங்கி
மற்றும்
அறக்கட்டளையின் நிர்வாகிகள்
திரு. அழகேசன்,
திரு. தேவராஜன்
உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று
சுவாமியை தரிசித்து வழிபட்டு சென்றனர்.
--------------------------------------------.