இந்திய இயற்பியல் விஞ்ஞானி
ரஞ்சன் ராய் டேனியல்
பிரபஞ்ச இயற்பியல் மற்றும் விண்வெளி இயற்பியல் துறைகளில் பணி புரிந்தார்.
1976 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்த இந்திரா காந்தி ஆலோசகராகவும் பணியாற்றினார்.
அறிவியல் மற்றும் பொறியியலுக்கான பங்களிப்பிற்காக
1992 ஆம் ஆண்டில் இந்திய அரசின்
பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.
ஆகஸ்ட். 11 - 1923 –
இந்திய இயற்பியல் விஞ்ஞானி
ரஞ்சன் ராய் டேனியல்
102 – வது பிறந்ததினம்.
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். ஆகஸ்ட். 11. –
ரஞ்சன் ராய் டேனியல்
கன்னியாகுமாரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் பிறந்த இயற்பியலாளர் ஆவார்.
சென்னை லயோலா கல்லுாரியில், இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார்.
'நோபல்' பரிசு பெற்ற சந்திரசேகர வெங்கட ராமனின் உதவியால்,
பனாரஸ் ஹிந்து பல்கலையில், எம்.எஸ்சி., பட்டம் பெற்றார் டேனியல்.
இவர் பிரபஞ்ச இயற்பியல் மற்றும் விண்வெளி இயற்பியல் துறைகளில் பணி புரிந்தார்.
மேலும்
டாட்டா இன்ஸ்டிடியூட் ஆப் பர்மாண்டன்
ஆராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராக இருந்தவா்.
இங்கிலாந்தில் உள்ள, பிரிஸ்டல் பல்கலையில் இவர் ஆராய்ச்சி ஆய்வுகளை மேற்கொள்ள, மத்திய அரசு நிதியுதவி வழங்கியது.
அணு குழம்புகளைப் பயன்படுத்தி ஆராய்ச்சி மேற்கொண்டார்.
பிஎச்.டி., பட்டமும் பெற்றார்.
பிரபஞ்ச இயற்பியல் மற்றும் விண்வெளி இயற்பியல் துறைகளில் பணி புரிந்தார்.
1976-ம் ஆண்டு இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்த இந்திரா காந்தி ஆலோசகராகவும் பணியாற்றினார்.
அவர் 23 ஆண்டுகளாக
ஹோமி ஜஹாங்கீர் பாபா உடன்
இணைந்து பிரபஞ்சத்தில் கதிரியக்கக் கதிர்கள் வேலை செய்தார்.
அறிவியல் மற்றும் பொறியியலுக்கான பங்களிப்பிற்காக
1992 ஆம் ஆண்டில் இந்திய அரசு அவருக்குப்
பத்ம பூசண்
விருது வழங்கப்பட்டது.
2005 மார்ச், 27ம் தேதி, தன், 81வது வயதில் உயிரிழந்தார்.
--------------------------------------------------.
வேண்டாம் போர்...
விழிப்புணர்வு பிரச்சாரம்...
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்