கிருஷ்ணகிரி கந்திகுப்பம்
ஸ்ரீகாலபைரவர் கோயிலில்
17-ம் ஆண்டு
ஸ்ரீகால பைரவாஷ்டமி
பெருந்திருவிழா – 2024
எம்.பி. கோபிநாத் பங்கேற்பு
ஓசூர். நவ. 17. –
by Jothi Ravisugumar
கிருஷ்ணகிரி கந்திகுப்பத்தில் அமைந்துள்ள
ஸ்ரீகாலபைரவர் கோயிலில்
17-வது ஆண்டு
ஸ்ரீகால பைரவாஷ்டமி பெருந்திருவிழா கோலாகலமாக தொடங்கியது.
17-வது ஆண்டு திருவிழா
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் கந்திகுப்பத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகாலபைரவர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் ஸ்ரீகாலபைரவாஷ்டமி திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கமாகும். அதேபோல நடப்பாண்டு 17-வது ஆண்டு திருவிழா தொடங்கியது. இந்த விழாவில் கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் கோபிநாத் பங்கேற்று 63 நாயன்மார்களின் குரு பூஜையை துவக்கி வைத்தார்.
63 நாயன்மார்கள் குரு பூஜை
சிறப்பு அபிஷேகம்
விழாவை முன்னிட்டு ஸ்ரீகாலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு குரு பூஜை நடைபெற்றது.
சிறப்பு அலங்காரம்
சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீகால பைரவர் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் கிருஷ்ணகிரி, பர்கூர், ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.