இரு சக்கர வாகன
ரோந்து திட்டம் (24x7)
கிருஷ்ணகிரி மாவட்டம்
காவல் துறை தலைவர்,
மேற்கு மண்டலம். கோவை அவர்களின்
உத்தரவின் பேரில்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும்
அவசர அழைப்பு எண் 100
தொடர்பான பிரச்சினைகளுக்கு
உடனடியாக தீர்வு காணும் நோக்கத்துடனும்,
14 இரு சக்கர ரோந்து திட்டம் (24x7)
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு. தங்கதுரை. IPS.
அவர்களின்
தலைமையில் தொடக்கம்.
கிருஷ்ணகிரி. ஜன. 23. –
14 இரு சக்கர ரோந்து திட்டம் (24x7)
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும்,
அவசர அழைப்பு எண் 100 தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் நோக்கத்துடனும்,
14 இரு சக்கர ரோந்து திட்டம் (24x7)
ஊத்தங்கரை.
சிங்காரப்பேட்டை.
பர்கூர்,
கிருஷ்ணகிரி நகரம்,
கிருஷ்ணகிரி தாலுக்கா,
காவேரிப்பட்டணம்.
ஓசூர் நகரம்.
அட்கோ,
சிப்காட் சூளகிரி,
தேன்கனிக்கோட்டை
மற்றும்
ராயக்கோட்டை
ஆகிய காவல் நிலைய எல்லைகளில்
தினமும் 24 மணி நேரமும்
ரோந்து திட்டம்
இன்று 23.01.2026-ம் தேதி முதல்
காவல் துறை தலைவர்,
மேற்கு மண்டலம். கோவை
அவர்களின் உத்தரவின் பேரில்,
மாவட்ட காவல் அலுவலகத்தில்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு. தங்கதுரை. IPS.
அவர்கள் கொடியசைத்து
தொடங்கி வைத்தார்.
இத்திட்டதின் மூலம்
100 அவசர அழைப்புகள்.
பெண்கள் பாதுகாப்பு.
விபத்து,
திருட்டு,
சமூக விரோத செயல்களை
கட்டுப்படுத்துதல் மற்றும்
பொதுமக்களின் புகார்களுக்கு
உடனடி நடவடிக்கை எடுப்பது
ஆகியவற்றிற்கு முக்கியத்துவம்
வழங்கப்படுகிறது.
பொதுமக்கள் அளிக்கும் 100 அவசர அழைப்புகளுக்கு குறுகிய நேரத்தில்
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று
உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும்
பள்ளிகள்.
கல்லூரிகள்,
வணிக வளாகங்கள்,
பேருந்து நிலையங்கள்,
சந்தைகள் மற்றும்
பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில்
குற்றச் சம்பவங்கள் நடைபெறாத வண்ணம்
24x7 இரு சக்கர ரோந்து திட்டம்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் காவல் துறைக்கு
முழு ஒத்துழைப்பு வழங்கி,
சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதற்கு
ஆதரவு அளிக்குமாறு
கேட்டுக் கொள்ளப்படுகிறது.
-------------------------------------.