கிருஷ்ணகிரி மாவட்டம்
தளி ஊராட்சி ஒன்றியம்
மலை கிராம குடியிருப்பில்
சமூதாய ஆழ்துளைக்கிணறு மூலம்
குடிநீர் வழங்கும் பணிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ்குமார். இ.ஆ.ப.,
அவர்கள்
துவக்கி வைத்தார்.
ஓசூர். அக். 22. –
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஊராட்சி ஒன்றியம்,
கேரட்டி கிராமம்
பழங்குடியினர் குடியிருப்பில்
KASA INDIA PVT LTD- நிறுவனத்தால் நிதியளிக்கப்பட்ட மற்றும்
சீராக்கு (NGO) அமைப்பு இணைந்து அமைக்கப்பட்டுள்ள
சமுதாய ஆழ்துளைக் கிணறு மூலம்
குடிநீர் வழங்கும் பணிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் (22.10.2025) துவக்கி வைத்து,
தளி ஊராட்சி ஒன்றியத்தில்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
சார்பாக, ரூ.79 இலட்சத்து 42 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள்,
காவேரி வனவிலங்கு சரணாலயத்தின் கீழ், அஞ்செட்டி வனப்பகுதியில் உள்ள பழங்குடி கிராமங்களுக்கு அத்தியாவசியத் தேவைகளைக் கொண்டுசேர்க்கும் வகையில்,
தளி ஊராட்சி ஒன்றியம்,
கேரட்டி கிராம பழங்குடியினர் குடியிருப்பில்
காளீஸ்வரி நிறுவனம்
சகோதர நிறுவனமான
KASA INDIA PVT LTD-ஆல்
நிதியளிக்கப்பட்ட மற்றும் சீராக்கு (NGO) அமைப்பு இணைந்து அமைக்கப்பட்டுள்ள சமுதாய ஆழ்துளைக் கிணறு மூலம் குடிநீர் வழங்கும் பணிகளை துவக்கி வைத்தார்.
கேரட்டி மலைகிராமம்
70 குடும்பங்களுக்கு குடிநீர்
இந்த ஆழ்துளைக் கிணறு 700 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், 2 HP சப்மெர்சிபிள் மோட்டார் பொருத்தப்பட்டு,
2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட கான்கிரீட் மேல்நிலைத் தொட்டிக்கு நீர் ஏற்றப்படுகிறது.
இந்தத் தொட்டியுடன், 5 நீர் வெளியேற்றும் குழாய்கள் இணைக்கப்பட்டு,
கேரட்டி கிராமத்தின் 70 பழங்குடியினக் குடும்பங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
400 குடும்பங்களுக்கு
சூரிய ஒளி தெருவிளக்கு
மேலும், இத்திட்டத்தின் ஒரு பகுதியாக,
மூன்று கிராமங்களில் 30 சூரிய ஒளியால் இயங்கும் தெருவிளக்குகள் நிறுவப்பட்டுள்ளன.
இதனால், வனப்பகுதிக்குள் வசிக்கும் சுமார் 400 குடும்பங்களுக்கு இரவு நேரங்களில் பாதுகாப்பு மற்றும் வெளிச்சம் கிடைக்கிறது.
இந்த கூட்டு முயற்சி, ரூ.12 இலட்சம் முதலீட்டில் தூரத்து கிராமங்களுக்கு சுகாதாரமான நீரையும், பாதுகாப்பான வெளிச்சத்தையும் வழங்கப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து,
தொட்டமஞ்சி கிராமத்தில்,
ராஷ்ட்ரிய கிராம் ஸ்வராஜ் அபியான்
திட்டத்தின் கீழ்,
ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கிராம ஊராட்சிமன்ற அலுவலக கட்டிட கட்டுமான பணிகள்,
தொட்டமஞ்சி ஊராட்சி மற்றும் நாட்றம்பாளையம் ஊராட்சி, தொட்டமஞ்சி மலைகிராமம்,
பெள்ளட்டி மலைவாழ் குடியிருப்பு பகுதியில்
பாரத பிரதமர் ஜென்மன்
திட்டத்தின் கீழ்,
தலா ரூ.5,73,000 வீதம் ரூ.68 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 12 வீடுகள் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மலை வாழ் மக்கள் கோரிக்கை
உடனடி தீர்வு
தொடர்ந்து,
நாட்றம்பாளையத்தில் ரூ.7 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமையல் அறை கூடத்தின் கட்டுமான பணிகளை
நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும்,
தொட்டமஞ்சி மலைக் கிராமத்தில்,
மலைவாழ் மக்களிடம் குறைகளைக்
கேட்கும்போது,
மின்சார வசதி,
சாலை வசதி,
போக்குவரத்து வசதி
உள்ளிட்ட வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தி தர மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்ததையடுத்து, இக்கோரிக்கையின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து,
நாட்றம்பாளையம் ஊராட்சி, கேரட்டி கிராமத்திற்கு அருகே உள்ள ஏத்தக்கிணறு பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சிகளில்,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்
திருமதி.கவிதா,
ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர்
திருமதி.மலர்விழி,
உதவி செயற்பொறியாளர்
திரு.சம்பத்,
வட்டாட்சியர்
திரு.செந்தில்குமார்,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
திரு.ராஜேஷ்,
திருமதி.விஜயா,
துணை வட்டாட்சியர்
திரு.மணிகண்டன்,
காலீஸ்வரி ரிஃபைனரி மற்றும் KASA INDIA PVT LTD பிரதிநிதிகள்,
NGO நிறுவனர்
திரு.தினேஷ்
மற்றும் வருவாய் துறை ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
---------------------------------------------------------.