S.I.R - ஆலோசனைக் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
54 - வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதியில்
வாக்காளர் பட்டியல்
சிறப்பு தீவிர திருத்தம் 2026 –
ஆலோசனைக் கூட்டம்
வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி
வாக்காளர் பதிவு அலுவலர் /
மாவட்ட வழங்கல் மற்றும்
நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் -
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி
பிரதிநிதிகள்
பங்கேற்பு
ஓசூர். நவ. 13. -
வாக்காளர் பட்டியல்
சிறப்பு தீவிர திருத்தம் - 2026
ஆலோசனைக் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
54 - வேப்பனஹள்ளி சட்டமன்றத்
தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்
வாக்காளர் பட்டியல்
சிறப்பு தீவிர திருத்தம் - 2026
மேற்கொள்வது தொடர்பாக
ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில்
நவ. 13-ம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில் நடந்த
இந்த ஆலோசனை கூட்டத்துக்கு
வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி
வாக்காளர் பதிவு அலுவலர் /
மாவட்ட வழங்கல் மற்றும்
நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்
ஆகியோர் தலைமை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில்
தற்போது வரை
கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்ட விவரம்,
கண்டுபிடிக்கப்பட்ட இறப்பு,
நிரந்தர இடமாற்றம் மற்றும்
இரு முறை பதிவு
ஆகியவற்றின் விவரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முகவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில்
சூளகிரி வட்டாட்சியர்
திரு. ரமேஷ்,
தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர்கள்,
வருவாய் ஆய்வாளர்கள்
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள்
கலந்து கொண்டனர்.
-------------------------------.