ஓசூர் பேகேப்பள்ளி ஊராட்சி
ஒன்றிய துவக்கப்பள்ளியில்
மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
ஓசூர். டிச. 10. –
மாவட்ட ஆட்சித் தலைவர்
கே.எம். சரயு IAS
நேரில் ஆய்வு
ஓசூர் பேகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய
துவக்கப்பள்ளியில் மாவட்ட
ஆட்சித் தலைவர் சரயு
ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஊராட்சி ஒன்றியம்
பேகேப்பள்ளியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி
இயங்கி வருகிறது. இந்தப் அரசுப் பள்ளியில், ராஜாஜி பிறந்த தினமான டிசம்பர் 10-ம் தேதியன்று மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, மாணவர்களின் வாசிப்புத்திறன் மற்றும் கணித வாய்ப்பாடு
ஒப்புவிப்பு திறனை கண்டறிய மாணவ, மாணவிகளிடம் பாடம் தொடர்பாக கலந்துரையாடினார்
ரூ.3.33 லட்சத்தில் வகுப்பறைகள்
சீரமைப்பு பணி ஆய்வு
மேலும் பேகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பில் பள்ளி வகுப்பறைகள் பழுது மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.எம்.சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து இந்த அரசுப்பள்ளியில் பராமரிக்கப்படும் சுத்தமான சுற்றுச்சூழல், மற்றும் மாணவர்களிடையே காணப்படும் ஒழுக்கம் ஆகியவை குறித்து பாராட்டு தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி, ஒன்றியக் குழு கவுன்சிலர் முரளி, ஊராட்சிமன்ற தலைவி சைத்ரா தலைமையாசிரியர் கவுரம்மா, ஆசிரியர்கள் லலிதா, கலைவாணி மற்றும் உடனிருந்தனர்.