விவசாயிகளுக்கு தனித்துவ
விவசாய அடையாள எண்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
விவசாயிகள்
26.02.2026-ம் தேதிக்குள்
தனித்துவ விவசாய அடையாள எண்
பெற்றுக்கொள்ள வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச. தினேஷ்குமார் இ.ஆ.ப,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. பிப். 24. -
தனித்துவ விவசாய
அடையாள எண்
(Farmer Registry)
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
விவசாயிகள் 26.02.2026-க்குள்
தனித்துவ விவசாய அடையாள எண்
பெற்றுக்கொள்ள வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச. தினேஷ்குமார் இ.ஆ.ப,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
பாரத பிரதமரின் கௌரவ நிதி உதவி
பெறும் 11,131 விவசாயிகள்
தனித்துவ அடையாள எண்
(Farmer Registry)
பெறாமல் உள்ளனர்.
மத்திய அரசு மூலம் வழங்கப்படும்
ரூ.2 ஆயிரம் உதவி தொகை பெறுவதற்கு
தனித்துவ அடையாள எண்
(Farmer Registry)
கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் அரசின் பல்வேறு வேளாண்
சார்ந்த திட்ட பலன்களை பெறுவதற்கு,
தங்களது நில உடமை விவரங்கள்,
பயிர் சாகுபடி அறிக்கை
போன்ற தொடர்புடைய ஆவணங்களை
ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.
இதில் ஏற்படும் காலதாமதத்தை
தவிர்க்கும் வகையிலும்,
விவசாயிகள் குறித்த நேரத்தில்
பயன்பெற ஏதுவாகவும்
தமிழ்நாட்டில்
வேளாண் அடுக்குத்திட்டம்
(AGRISTACK)
செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது, விவசாயிகளின்
பதிவு விவரங்களுடன்,
ஆதார் எண்,
கைப்பேசி எண்,
நில உடமை
விவரங்களை விடுபாடின்றி இணைக்கும்
பணி நடைபெற்று வருகிறது.
விவசாயிகள் பொது சேவை மையத்தின்
மூலம் தங்களின் நில உடமை விவரங்கள் இணைக்கப்பட்ட பின்னர் அனைத்து விவரங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட ஆதார் எண் போன்ற
தனித்துவமான தேசிய அளவிலான
அடையாள எண்
ஒவ்வொரு விவசாயிக்கும்
பதிவு செய்து தரப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
1,88,505 விவசாயிகளில்
1,25,872 விவசாயிகள் மட்டுமே நில உடைமை பதிவு செய்துள்ளனர்.
மீதமுள்ள 62.633 விவசாயிகள் பதிவு செய்யவில்லை.
இவற்றில் 11,131 விவசாயிகள் பாரத பிரதமரின் கௌரவ நிதி உதவி பெறும் பயனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அடையாள எண் இல்லாத விவசாயிகள்
வரும் காலங்களில்
பிரதம மந்திரி கௌரவ நிதித் திட்டப்
பயன்களைப் பெற இயலாது.
மேலும்,
பயிர் காப்பீட்டுத் திட்டம்.
குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம்
உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில்
பயன்பெற இந்த அடையாள எண் அவசியம்.
எனவே விவசாயிகள் அருகில் உள்ள
பொதுச் சேவை மையம் (CSC) அல்லது
வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு,
வரும் பிப்ரவரி 26 ஆம் தேதிக்குள்
தங்களது
நில உடமை விவரங்கள்,
ஆதார்,
கைப்பேசி எண்
ஆகிய விவரங்களை அளித்து, எவ்வித கட்டணமுமின்றி விவசாயிகள் பதிவு செய்து அடையாள எண் பெற்று பயனடையலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச. தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
-----------------------------------.