ஓசூர் தேவீரப்பள்ளியில்
ரூ.14 லட்சத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடத்துக்கு பூமி பூஜை
எம்எல்ஏ பங்கேற்பு
ஓசூர். நவ. 25 –
by Jothi Ravisugumar
தேவீரப்பள்ளி கிராமம்
ஓசூர் ஒன்றியம் தேவீரப்பள்ளி கிராமத்தில் ரூ.14லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணியை எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தொடங்கி வைத்தார்.
பாலிகானப்பள்ளி ஊராட்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒன்றியம், பாலிகானப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட தேவீரப்பள்ளி கிராமத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் அமைக்கும் பணிக்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.14லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ரூ.14 லட்சத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடத்துக்கு பூமி பூஜை
எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்
அதைத்தொடர்ந்து தேவீரப்பள்ளி கிராமத்தில் புதிய அங்கன்வாடி அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஓசூர் ஒன்றிய குழு துணைத்தலைவர் கே.நாராயணசாமி முன்னிலை வகித்தார்.. இதில் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தலைமை வகித்து பூமி பூஜை செய்து புதிய அங்கன்வாடி அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி, ஊராட்சி தலைவர் உமாமூர்த்தி, துணைத்தலைவர் வட்டள்ளியப்பா, தொரப்பள்ளி கவுன்சிலர் உமாசீனிவாஸ் மற்றும் கிராம் மக்கள் கலந்து கொண்டனர்.