ராம்நாயக்கன் ஏரி பூங்கா ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட
ராமநாயக்கன் ஏரிக்கரையில்
அமைக்கப்பட்டு வரும்
புதிய பூங்கா பணிகளை
மாநகர மேயர்
திரு. S.A.சத்யா. Ex.MLA
அவர்கள்,
நேரில் ஆய்வு
ஓசூர். நவ. 19. –
ஓசூர் மாநகராட்சி
ராம்நாயக்கன் ஏரி பூங்கா
மேயர் ஆய்வு
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட ராமநாயக்கன் ஏரிக்கரையில்
புதிதாக அமைக்கப்பட்டு வரும்
பூங்கா பணிகளை
மாநகர மேயர்
திரு. S.A.சத்யா. Ex.MLA
அவர்கள் நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்.
தளி சாலை
குழந்தைகள் பூங்கா
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சியில் நகரின் மையப்பகுதியில்
100-க்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில்
ராம்நாயக்கன் ஏரி அமைந்துள்ளது.
இந்த ஏரியை ஒட்டிச் செல்லும்
தளி சாலை பகுதியில் உள்ள ஏரிக்கரையில்
ஏற்கனவே குழந்தைகள் பூங்கா
அமைக்கப்பட்டுள்ளது.
தேன்கனிக்கோட்டை சாலை
புதிய பூங்கா
தற்போது தேன்கனிக்கோட்டை சாலை
பகுதியில் உள்ள
ராம்நாயக்கன் ஏரிக்கரையை ஒட்டியவாறு
புதியதாக அழகிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்காவில் சிறுவர் சிறுமிகளுக்கான
விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டு,
அழகிய சுவர் சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளது.
ஏரிக்கும் பூங்காவுக்கும் இடையே பாதுகாப்பு வேலி
அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நவ. 19-ம் தேதியன்று
இந்த பூங்காவில் மேற்கொண்டுள்ள பணிகளை
மாநகர மேயர்
திரு. எஸ்.ஏ. சத்யா. Ex.MLA
அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு
மேற்கொண்டார்.
நிழற்குடைகள்
அப்போது இருசக்கர மற்றும் நான்கு சக்கர
வாகனங்கள் நிறுத்துமிடம் அமைப்பது.
பொதுக்கழிப்பிடங்கள் அமைத்து பராமரித்தல்,
விளையாட்டு உபகரணங்கள்
கூடுதலாக அமைத்து தருதல் மற்றும்
நிழற்குடைகள் அமைத்தல்
உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைத்து
கொடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வு பணியின் போது
மாநகர நலஅலுவலர்
டாக்டர். அஜிதா,
மாநகராட்சி அதிகாரிகள்,
மாமன்ற உறுப்பினர்கள்
இந்திராணி,
நாகராஜ்,
மாரக்கா சென்னீரன்,
யஸ்வினி மோகன்,
மாவட்ட பிரதிநிதி
ஜெய் ஆனந்த்,
பொதுமக்கள் உடன் இருந்தனர்.