ஓசூர் மாநகராட்சியில்
இந்திய தொழில் கூட்டமைப்பின்
இளம் இந்தியர்கள் (ஓய்.ஐ)
70-வது கிளை தொடக்க விழா
ஓசூர். டிச. 14. –
ஓசூரில் இந்திய தொழில் கூட்டமைப்பின்(சிஐஐ)
துணை அமைப்பான இளம் இந்தியர்கள்(ஓய்.ஐ) அமைப்பின் 70-வது கிளை தொடக்க விழா செயின்ட் பீட்டர்ஸ்
மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது.
ஓசூர் நகரில் 70-வது கிளை திறப்பு
இளம் இந்தியர்கள் அமைப்பின் கிளைகள்,
இந்திய அளவில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களுரு, ஐதராபாத் உட்பட 69 நகரங்களில் இயங்கி வருகிறது. தற்போது ஓசூர் நகரில் 70-வது கிளை தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ஏற்கனவே சேலம், மதுரை, உட்பட 15 கிளைகள் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தற்போது தமிழக அளவில் 16-வது கிளை ஓசூர் நகரில் தொடங்கப்பட்டுள்ளது.
வலிமையான இந்தியா
இந்த இளம் இந்தியர்கள் அமைப்பில் 21 வயது முதல் 45 வயதுள்ளவர்கள்
உறுப்பினர்களாக உள்ளனர்.
இளம் இந்தியர்கள் கிளை மூலமாக இந்திய இளைஞர்களை ஒருங்கிணைத்து அனைத்து துறைகளிலும்
வளர்ச்சியடைந்த நவீனமான மற்றும்
வலிமையான இந்தியாவை
உருவாக்கும் வகையில் பாடுபடுகின்றனர்.
ஓசூர் கிளை தலைவர் ஜோதி பிரசாத்
இந்த நிகழ்வில் ஓசூரில் தொடங்கப்பட்ட 70-வது கிளையின் புதிய உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டு, அனைவருக்கும் பேட்ஜ் அணிவிக்கப்பட்டது.
ஓசூர் கிளை இணை தலைவர்
மருத்துவர் லாசியா தம்பிதுரை
ஓசூர் 70-வது கிளையின் தலைவராக இளம் தொழிலதிபர் ஜோதி பிரசாத், இணை தலைவராக
மருத்துவர் லாசியா தம்பிதுரை, ஆகியோருக்கு பேட்ஜ் அணிவிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டனர். அவர்களைத் தொடர்ந்து 25 உறுப்பினர்களும் பேட்ஜ் அணிந்து பொறுப்பேற்றனர்.
ஓசூர் 70-வது கிளையின் இணை தலைவர்
மருத்துவர் லாசியா தம்பிதுரை
செய்தியாளர்களிடம் கூறியதாவது,
ஓசூர் போன்ற தொழில் நகரங்களில்
ஏராளமான இளைஞர்கள் உள்ளனர்.
அவர்களின் திறன்களை மேம்படுத்தி,
வலிமையான இந்தியாவை உருவாக்கும் விதமாக
இந்த அமைப்பு பல்வேறு நிலைகளிலும் மிகுந்த உதவியாக இருக்கும் என்றார்.
தமிழ்நாடு மாநிலத்தலைவர் சவுகன்
ஒவ்வொருவரும் தங்களுடைய 21-வது வயது முதலே சமூகத்துக்கு சேவையாற்ற முன்வரவேண்டும் என்பதே இந்த அமைப்பின் நோக்கமாகும். என்றார்.
தேசிய இளம் இந்தியர்கள் அமைப்பின் துணைத்தலைவர் அருண் ராத்தோட்
இளைஞர்களிடையே தலைக்கவசம் அணிவது
குறித்த விழிப்புணர்வு, சிறார்கள் பாலியல்
வன்முறைகளை தடுத்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட சமூக விழிப்புணர்வு சேவைகளுடன், பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு உதவுவதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாக உள்ளது.
அன்மையில் இந்த அமைப்பு சார்பில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு
நல உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் அதியமான் கல்லூரி
மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.