மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
காத்திருப்பு போராட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சியில்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்
நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத
பொது மக்களின் அடிப்படை
வசதிகளை செய்து தரக்கோரி
காத்திருப்பு போராட்டம்
ஓசூர். டிச. 30. –
ஓசூர் மாநகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் சார்பில்
மத்திகிரியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தை பொதுமக்களின் பயன்பாட்டு திறக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
காத்திருப்பு போராட்டம்
மத்திகிரி சமுதாயக்கூடம் முன்பு
டிச. 30-ம் தேதியன்று நடந்த
இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
ஓசூர் மாநகர குழு செயலாளர்
M.G.நாகேஷ்பாபு
தலைமை வகித்தார்.
ஓசூர் ஒன்றிய குழு உறுப்பினர்
K. சந்திரசேகர்
முன்னிலை வகித்தார்.
பேரணி
காத்திருப்பு போராட்டத்தை முன்னிட்டு
CPM மாநிலகுழு உறுப்பினர்
R. பத்ரி
தலைமையில் மத்திகிரி பேருந்து நிலையம்
முதல் சமுதாயக்கூடம் வரை
பேரணி நடைபெற்றது.
கண்டன உரை
இந்த காத்திருப்பு போராட்டத்தில்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
மாநில குழு உறுப்பினர்
R. பத்ரி
பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
மாநகர குழு உறுப்பினர்
B.G. மூர்த்தி
மாவட்ட செயற்குழு உறுப்பினர்
P. நாகராஜ்ரெட்டி,
மாவட்ட செயற்குழு உறுப்பினர்
K. மஹாலிங்கம்,
மாவட்ட செயற்குழு உறுப்பினர்
ஜேம்ஸ் ஆஞ்சலாமேரி,
மாவட்ட செயற்குழு உறுப்பினர்
N. ஸ்ரீதர்,
மாவட்ட செயற்குழு உறுப்பினர்
C. சுரேஷ்,
தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்
A. ஆனந்தன்,
ஓசூர் ஒன்றியச் செயலாளர்
R.K. தேவராஜ்,
தீண்டாமை ஒழிப்பு முன்னணி
மாவட்ட துணைச்செயலாளர்
M.ரவி.
ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மூடப்பட்டுள்ள
சமுதாயக்கூடம்
இந்த காத்திருப்பு போராட்டத்தில்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்று
திறக்கப்படாமல் உள்ள சமூதாயக்கூடம்
முன்பு அமர்ந்து முழக்கமிட்டனர்.
அப்போது…
ஓசூர் மத்திகிரியில் 15 ஆண்டுகளுக்கும்
மேலாக கட்டி முடிக்கப்பட்டுள்ள சமூதாயக்கூடத்தை உடனடியாக
மக்களின் பயன்பாட்டுக்கு
திறக்க வேண்டும்.
அரசுப்பள்ளிக்கூடம்
கால்நடை மருத்துவமனை
மிடுகரப்பள்ளி கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் மண்சாலையை, தார்சாலையாக அமைத்து தரவேண்டும்.
ஓசூர் ஒன்றியம் எடையநல்லூர்,
எடப்பள்ளி, அச்செட்டிப்பள்ளி,
சூதாளம், மத்திகிரி, குசினிபாளையம்,
அஞ்செட்டிமேஸ்திரிகுடியிருப்பு,
மஞ்சுநாத்நகர், வெங்கடேஷ்நகர்
ஆகிய பகுதிகளுக்கு செல்லும் தார் சாலைகள் பழுதடைந்து மிகவும் மோசமான
நிலையில் உள்ளதை
சீர் செய்து தரக்கோரியும்,
எடையநல்லூர் கிராமத்தில்
கட்டி முடிக்கப்பட்டு நீண்ட நாட்களாக
திறக்கப்படாமல் உள்ள
அரசுப்பள்ளி கூடமும்,
கால்நடை மருத்துவமனையும்,
உடனடியாக திறக்க வேண்டும்
என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி
கண்டன முழங்கங்கள் எழுப்பியபடி
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த காத்திருப்பு போராட்டம் நடந்த
இடத்திற்கு பிற்பகலில் வருகை தந்த
ஓசூர் மாநகர உதவி ஆணையர்
நாராயணன்,
மத்திகிரி காவல்நிலைய ஆய்வாளர்
முத்தமிழ் ஜெயராஜ்.
ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலர்
சிராஜ்
ஆகியோர் CPM கட்சி நிர்வாகிகளிடம்
பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
இந்த பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததை
தொடர்ந்து காத்திருப்பு பேராட்டம்
இரவு முழுவதும் தொடரும் என
CPM கட்சி நிர்வாகிகளால் அறிவிக்கப்பட்டு,
சமூதாயக்கூடம் முன்பு
காத்திருப்பு போராட்டத்தில் CPM கட்சியினர் தொடர்ந்து ஈடுபட்டனர்.
இந்நிலையில்
இரவு 8 மணிக்கு பிறகு
ஓசூர் வட்டாட்சியர்
குணசிவா
சமுதாய கூடத்திற்கு வருகை தந்து
பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அதைத் தொடர்ந்து காத்திருப்புபோராட்டம்
10 நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக
CPM கட்சி நிர்வாகிகள் அறிவித்தனர்.
அதைத் தொடர்ந்து காலை 11 மணியில்
இருந்து நடைபெற்று வந்த
காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.
இந்த காத்திருப்பு போராட்டத்தில்
ஓசூர் ஒன்றிய
குழு உறுப்பினர்கள்
அந்தோனி சாமி, திம்மாரெட்டி,
ஜெயராம், ஆனந்தரெட்டி,
தனலட்சுமி, தங்கம்மா,
சீனிவாசரெட்டி, சங்கர், மரிரெட்டி.
மாநகர குழு உறுப்பினர்கள்
M.M.ராஜு, G.ஸ்ரீதரன்,
G.சீனிவாசன்,
ரவி, மணி, உதய்பாரதி.
மாநகர குழு கிளைசெயலாளர்கள்
பிரபாகரன், பத்மா, புனிதா,
பெருமாள், தேவராஜ், முருகன்,
ரசாலம், குணசேகர், மஞ்சுநாத், ரவி,
ஓசூர் ஒன்றிய குழு கிளை செயலாளர்கள்
நாராயணசாமி, வெங்கடேஷ்,
அனுமந்தராஜு, ராமகிருஷ்ணன்,
யஸ்வந்தகுமார், நாகராஜு,
ரமேஷ், வெங்கடேசன்,
கோபி, நாகேஷ், வெங்கடேஷ்ரெட்டி
மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நன்றியுரை
தோழர் வெண்னிலா நன்றியுரை கூறினார்.
-------------------------------.