கிருஷ்ணகிரி மாவட்டம்
படேதலாவ் ஏரிக்கால்வாய் தூர்வாரும் பணிகள்,
தாயுமானவர் திட்டத்தின் கீழ்,
மாற்றுத்திறனாளிகள் மற்றும்
வயது முதிர்ந்தோர்களுக்கு
பொது விநியோக திட்ட பொருட்கள்
வழங்கும் பணிகள்
அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு உணவு
வழங்கும் பணிகள்
கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர்
திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ் இ.ஆ.ப.,
அவர்கள்,
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் முன்னிலையில்,
நேரில் பார்வையிட்டு ஆய்வு
ஓசூர். நவ. 7. –
தாயுமானவர் திட்டம்
“கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூத்த குடிமக்கள் / மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 27,927 குடும்ப அட்டைதாரர்களுக்கு தாயுமானவர் திட்டத்தின் கீழ் பொது விநியோக திட்ட பொருட்கள் விநியோகம்
செய்யப்படுகிறது” -
கிருஷ்ணகிரி மாவட்ட
கண்காணிப்பு அலுவலர்
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம்,
பூசாரிப்பட்டி, கம்மம்பள்ளி பகுதியில் உள்ள
படேதலாவ் ஏரிக்கால்வாய்,
சமூக பொறுப்பு நிதியின் கீழ்,
தூர்வாரும் பணிகள் மற்றும்
கிருஷ்ணகிரி வட்டத்திற்குட்பட்ட ஆர்.பூசாரிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நியாயவிலைக் கடை மூலம் தாயுமானவர் திட்டத்தின் கீழ்,
மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தோர்களுக்கு பொது விநியோக திட்ட பொருட்கள் வழங்கும் பணிகள்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறன்,
அங்கன்வாடி மைய செயல்பாடுகளை
அரசு செயலாளர்,
வணிகவரி மற்றும் பதிவுத்துறை,
கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர்
திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ் இ.ஆ.ப.,
அவர்கள்,
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் முன்னிலையில், நவ.7-ம் தேதியன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள்
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம்,
பூசாரிப்பட்டி,
கம்மம்பள்ளி
பகுதியில் உள்ள
படேதலாவ் ஏரிக்கால்வாய், சமூக பொறுப்பு நிதியின் கீழ், தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பரப்பளவில் பூசாரிப்பட்டி பகுதியில் படேதலாவ் ஏரி சுமார் 163 ஏக்கர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஏரி 85.35 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது.
படேதலாவ் ஏரிக்கு வரக்கூடிய தண்ணீரை பர்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட
வெண்ணம்பள்ளி ஏரி,
சுண்டம்பட்டி ஏரி,
ஒரப்பம் சின்ன ஏரி,
பெரிய ஏரி,
பாலிநாயனப்பள்ளி ஏரி,
ராசிப்பள்ளி ஏரி,
கெட்டூர் ஏரி,
செந்தாரப்பள்ளி ஏரி,
நாராயணப்பன் ஏரி,
மோடிகுப்பம் ஏரி,
நக்கல்பட்டி ஏரி,
பயாஸ்கான ஏரி
காட்டகாரம் காசிம்கான் ஏரி
ஆகிய 13 ஏரிகளுக்கு நிரப்புவதற்காக கிட்டதட்ட 18 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள கால்வாய்களை சமூக பொறுப்பு நிதியின் மூலம் தூர்வாருவதற்கான பணிகள் 06.11.2025 அன்று துவக்கி வைக்கப்பட்டு,
தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தூர்வாரும் பணிகள் இரண்டு வார காலங்களுக்குள் முடிக்கப்பட்டு தண்ணீர் நிரப்பப்படும்.
5,67,710 குடும்ப அட்டைகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
1058 முழுநேர மற்றும் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் மூலம் 5,67,710 குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
தாயுமானவர் திட்டம்
65-70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் / மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாக சென்று பொது விநியோக திட்ட பொருட்கள் விநியோகம் செய்யும் தாயுமானவர் திட்டம் ஆகஸ்ட் - 2025 ல் துவக்கி வைக்கப்பட்டது.
மேலும், 65 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் / மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 27,927 குடும்ப அட்டைதாரர்களுக்கு தாயுமானவர் திட்டத்தின் கீழ் பொது விநியோக திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
இன்று கிருஷ்ணகிரி வட்டத்திற்குட்பட்ட ஆர்.பூசாரிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நியாயவிலைக் கடை மூலம் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பொது விநியோக திட்ட பொருட்கள் பெற்று வரும் மூத்த குடிமக்கள்
திருமதி.எல்லம்மாள்
க/பெ.கோவிந்தன்
மற்றும்
மாற்றுத்திறனாளி லட்சுமி
ஆகியோர்களிடம் பொது விநியோக திட்ட பொருட்கள் வழங்கப்படுவது குறித்தும்,
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ்
மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுவது
குறித்தும் பயனாளிகளிடம் கேட்டறிந்தார்.
அங்கன்வாடி மையம்
மேலும், ஆர்.பூசாரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்
மாணவர்களின் கற்றல் திறனையும்,
அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வருகை பதிவேடு,
குழந்தைகளின் எடை,
உயரம்,
அவர்களுக்கு வழங்கப்படும் உணவு
ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இலவச வீட்டு மனை பட்டா
தொடர்ந்து, கிருஷ்ணகிரி வட்டம்,
பெத்ததாளப்பள்ளி ஊராட்சியில்,
அரசாணை எண்.97 -ன்படி,
தீர்வை ஏற்படாத தரிசு நிலத்தை நத்தமாக வகைபாடு மாற்றம் செய்து
328 நபர்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
14.09.2025 அன்று நடைபெற்ற
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள் தலைமையில் நடைபெற்ற அரசு விழாவில் இலவச வீட்டுமனை பட்டா பெற்றனர்.
பட்டா பெற்ற பயனாளிகளின் குடியிருப்பு பகுதிகளுக்கு
மாவட்ட கண்காணிப்பு அலுவலர்
அவர்கள் நேரடியாக சென்று
பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.
மேலும், தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என கூறினார்.
இந்த ஆய்வு பணிகளின்போது,
வருவாய் கோட்டாட்சியர்
திரு.ஷாஜகான்,
துணை ஆட்சியர் (பயிற்சி)
செல்வி.க்ரிதி காம்னா இ.ஆ.ப.,
மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்
திரு.முத்துராஜ்,
நீர்வளத்துறை செயற்பொறியாளர்
திரு.செந்தில் குமார்,
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்
திரு.நடராஜன்,
மாவட்ட வழங்கல் அலுவலர்
திருமதி.கீதா ராணி,
கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர்
திரு.பெரியசாமி,
உதவி செயற்பொறியாளர்
திரு.அறிவொளி,
உதவி பொறியாளர்
திரு.சையத் ஜாஹீருதின்,
வட்டாட்சியர்
திரு.ரமேஷ்
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
--------------------------------------.