கிருஷ்ணகிரி மாவட்டம்
77-வது குடியரசு தின விழா
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள்
தேசிய கொடியை ஏற்றி வைத்து
மரியாதை செலுத்தி,
காவல் துறை அணிவகுப்பு மரியாதை
ஏற்றுக்கொண்டார்.
66 காவலர்களுக்கு
மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சரின்
காவலர் பதக்கங்கள்
வழங்கி கவுரவிப்பு
கிருஷ்ணகிரி. ஜன. 26. –
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு திடலில் நடைபெற்ற 77-வது குடியரசு தின விழாவில்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் இன்று (26.01.2026)
தேசிய கொடியை ஏற்றி வைத்து
மரியாதை செலுத்தி,
காவல் துறை அணிவகுப்பு
மரியாதை ஏற்றுக்கொண்டார்.
66 காவலர்களுக்கு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின்
காவலர் பதக்கங்களும்,
பல்வேறு அரசு துறைகளைச் சேர்ந்த
580 அலுவலர்களுக்கு
கேடயங்கள் மற்றும் நற்சான்றிதழ்களும்,
53 பயனாளிகளுக்கு
ரூ.2 கோடியே 51 லட்சத்து
4 ஆயிரத்து 713 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு திடலில்
77-வது குடியரசு தின விழாவையொட்டி,
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் இன்று (26.01.2026) தேசிய கொடியினை ஏற்றி வைத்து,
காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு,
சமாதான புறா
மற்றும்
மூவர்ண பலூன்களை
பறக்க விட்டார்.
இந்நிகழ்ச்சிக்கு
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு.பெ.தங்கதுரை
அவர்கள் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து,
சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை
அணிவித்து கெளரவித்தார்.
தொடர்ந்து,
66 காவலர்களுக்கு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின்
காவலர் பதக்கங்களும்,
காவல் துறை,
முன்னாள் படைவீரர் நலத்துறை,
தீயணைப்பு மீட்புபணிகள் துறை,
வருவாய்த்துறை, வனத்துறை,
வேளாண்மைத்துறை,
வேளாண்மை பொறியியல் துறை,
வேளாண் வணிகம்,
தோட்டக்கலை மற்றும்
மலைப்பயிர்கள் துறை,
தோட்டக்கலை கல்லூரி மற்றும்
ஆராய்ச்சி நிலையம் பையூர்,
மண்டல ஆராய்ச்சி நிலையம் பையூர்,
கால்நடை பராமரிப்புத்துறை,
இணை இயக்குநர் (நலப்பணிகள்),
துணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் தொழுநோய்),
108 ஆம்புலன்ஸ்,
இந்திய மருத்துவம் மற்றும்
ஓமியோபதித்துறை,
பொதுசுகாதாரம் மற்றும்
நோய் தடுப்பு மருந்துதுறை,
மருத்துவம்,
ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்பநலம்,
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் நலத்துறை,
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்,
மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை,
மாவட்ட வழங்கல் மற்றும்
நுகர்வோர் பாதுகாப்பு துறை,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்,
உணவு பாதுகாப்பு துறை,
தாட்கோ,
நில அளவைத் துறை,
ஓசூர் மாநகராட்சி,
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்,
போக்குவரத்து துறை,
நெடுஞ்சாலைத்துறை,
மாவட்ட விளையாட்டு மற்றும்
இளைஞர் நலத்துறை,
மாவட்ட சமூக நலத்துறை,
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்,
பொதுப்பணித்துறை (கட்டடம்),
மீனவளம் மற்றும் மீனவர் நலத்துறை,
பேரூராட்சிகள் துறை,
இந்து சமய அறநிலையத்துறை,
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்,
தேசிய தகவல் மையம்,
மாவட்ட தொழில் மையம்,
கிருஷ்ணகிரி நகராட்சி,
வேளாண்மை விற்பனை மற்றும்
வேளாண் வணிகத்துறை,
நீர்வளத்துறை,
கல்வித்துறை
ஆகிய துறைகளைச் சார்ந்த
580 அரசு அலுவலர்களுக்கு
நற்சான்றிதழ்கள், கேடயங்களை
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் வழங்கினார்.
தொடர்ந்து,
முன்னாள் படைவீரர்கள் நலத்துறை
சார்பாக,
2 பயனாளிகளுக்கு ரூ.75 ஆயிரம் மதிப்பில்
கல்வி உதவித்தொகையும்,
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
சார்பாக,
6 மாற்றுத்திறனாளிகளுக்கு
ரூ.6 லட்சத்து 86 ஆயிரத்து 400 மதிப்பில் பேட்டரியால் இயங்கும்
சிறப்பு சக்கர நாற்காலிகள்,
வருவாய்த்துறை
சார்பாக
11 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து
25 ஆயிரம் மதிப்பில்
இலவச வீட்டுமனைப் பட்டாக்களும்,
தாட்கோ
சார்பாக, 5 பயனாளிகளுக்கு
ரூ.3 லட்சத்து 89 ஆயிரத்து 250 மதிப்பில்
வாகனம், கல்வி உதவித்தொகை மற்றும்
திருமண உதவித்தொகையும்,
வேளாண்மை பொறியியல் துறை
சார்பாக,
2 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சம் மதிப்பில் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள்,
தோட்டக்கலை மற்றும்
மலைப்பயிர்கள் துறை
சார்பாக,
2 பயனாளிகளுக்கு
ரூ.12 லட்சத்து 80 ஆயிரத்து 63 மதிப்பில் பசுமைக்குடில் அமைப்பதற்கான
மானியம் மற்றும் சொட்டுநீர் பாசனம் அமைக்கவும்,
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
சார்பாக,
10 பயனாளிகளுக்கு
ரூ.49 ஆயிரம் மதிப்பில் இலவச தையல் இயந்திரங்கள்,
மாவட்ட விளையாட்டு மற்றும்
இளைஞர் நலத்துறை
சார்பாக
13 நபர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பதக்கங்கள்,
மாவட்ட தொழில் மையம்
சார்பாக,
2 பயனாளிகளுக்கு
ரூ.2 கோடியே 6 லட்சம் மதிப்பில்
அட்டைபெட்டி மற்றும் ஆட்டோ உதிரி பாகங்கள் தயாரித்தல்
என மொத்தம்
53 பயனாளிகளுக்கு
ரூ.2 கோடியே 51 லட்சத்து
4 ஆயிரத்து 713 மதிப்பிலான
அரசு நலத்திட்ட உதவிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
சமூக பொறுப்பு நிதியின் கீழ்
வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்திய
கேட்டர்பில்லர் நிறுவனம்,
டைட்டான் நிறுவனம்,
டைட்டான் என்ஜீனீரிங் நிறுவனம்,
டி.வி.எஸ். டிரஸ்ட்,
குளோபல் கால்சியம் நிறுவனம்,
டாடா எலக்ரானிக்ஸ்,
குறுஞ்சி இன்டர்நேஷ்னல் டிரஸ்ட்,
ஐ. ஆராய்ச்சி பவுண்டேசன்,
ஆகிய நிறுவனங்களுக்கு
மாவட்ட ஆட்சித்தலைவர்
பாராட்டு சான்றிதல் மற்றும்
கேடயங்களை வழங்கினார்.
கலை நிகழ்ச்சிகள்
தொடர்ந்து,
கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி,
மத்தூர் அரசு மகளிர்
மேல்நிலைப்பள்ளி,
கிருஷ்ணகிரி அரசு மகளிர்
மேல்நிலைப்பள்ளி,
பர்கூர் விக்டோரியா மெட்ரிக்
மேல்நிலைப்பள்ளி,
பர்கூர் புனித அன்னாள் பப்ளிக் பள்ளி
ஆகிய 5 பள்ளிகளைச்
சேர்ந்த 910 மாணவ, மாணவியர்கள்
பங்கு பெற்ற கலை நிகழ்ச்சிகள்
நடைபெற்றது.
கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட
பள்ளிகளுக்கு நினைவு பரிசாக
கேடயங்களை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் வழங்கினார்.
கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு கேடயம் வழங்கி
பாராட்டுகளை தெரிவித்தார்.
இவ்விழாவில்
மாவட்ட வருவாய் அலுவலர்
திரு.அ.சாதனைக்குறள்,
திட்ட இயக்குநர்
(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை)
திருமதி.கவிதா,
மாவட்ட ஆட்சியரின்
நேர்முக உதவியாளர் (பொது)
திரு.கோபு,
கிருஷ்ணகிரி
வருவாய் கோட்டாட்சியர்
திரு.ந.ஷாஜகான்,
கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்
திரு.சங்கர்,
திரு.நமச்சிவாயம்,
தனித்துணை ஆட்சியர்
(சமூக பாதுகாப்பு திட்டம்)
திருமதி.அபிநயா,
மாவட்ட வழங்கல் அலுவலர்
திருமதி.கீதாராணி,
துணை ஆட்சியர்கள் (பயிற்சி)
செல்வி.க்ரிதிகாம்னா இ.ஆ.ப.,
செல்வி.சௌமியா,
மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்
திரு.சிவக்குமார்,
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்
நல அலுவலர்
திருமதி.பத்மலதா,
தோட்டக்கலைத்துறை
இணை இயக்குநர்
திருமதி.இந்திரா,
மாவட்ட மாற்றுத்திறனாளிகள்
நலத்துறை அலுவலர்
திரு.முருகேசன்,
மாவட்ட தொழில் மைய
பொது மேலாளர்
திரு.பிரசன்ன பாலமுருகன்,
இந்தியன் வங்கி
முன்னோடி வங்கி மேலாளர்
திரு.சரவணன்,
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
திரு.மதன்குமார்,
வட்டார வளர்ச்சி அலுவலர்
திரு.உமாசங்கர்
மற்றும்
துணை காவல் கண்காணிப்பாளர்கள்,
அரசு துறை சார்ந்த அலுவலர்கள்,
முக்கிய பிரமுகர்கள், பயனாளிகள்,
மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
---------------------------------------------------.