உலக தமிழ் அமைப்பின் சார்பில்
ஓசூர் அத்வைத்
தனியார் பள்ளிக்கு விருது
லண்டனில் விருது வழங்கி கவுரவிப்பு
ஓசூர். டிச. 14. –
லண்டன் உலக தமிழ் அமைப்பு
ஓசூர் மாநகராட்சியில் நவீன தொழில்
நுட்பத்தில் மாணவர்களுக்கு சிறந்த கல்வி வழங்கி பொருளாதார ரீதியாக மேம்பாடு அடைந்துள்ள அத்வைத் தனியார் பள்ளியை
பாராட்டி லண்டனில் உள்ள உலக தமிழ் அமைப்பு
சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது.
அத்வைத் பள்ளி நிறுவன தலைவர்
அஸ்வத் நாராயணன்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பாகலூர் சாலையில் அத்வைத் தனியார் பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தை அதன்
நிறுவன தலைவர் அஸ்வத் நாராயணன்
நவீன தொழில் நுட்பத்தில் மாணவர்களுக்கு
கல்வி கற்பித்து, திறம்பட நடத்தி வருகிறார்.
லண்டன் நாடாளுமன்றம்
லண்டனில் உள்ள உலக தமிழ் அமைப்பு சார்பில் பல்வேறு நாடுகளில் பொருளாதார மேம்பாடு அடைந்துள்ள
சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்து, உயரிய தொழில் நுட்பம், டிஜிட்டல் முறையில் சிறந்த கல்வி வழங்குவதில் சிறந்து விளங்கும் ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள அத்வைத் தனியார் பள்ளியை லண்டனில் உள்ள உலக தமிழ் அமைப்பு எக்னாமிக் டெவலப்மெண்ட்
சாதனை விருதுக்கு தேர்வு செய்து, விருது வழங்கி உள்ளது.
லண்டன் நாடாளுமன்ற வளாகத்தில் டிசம்பர் 6-ம் தேதி விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் லண்டன் நாடாளுமன்ற உறுப்பினர் சைமன் பங்கேற்று விருது வழங்க
அத்வைத் பள்ளியின் நிறுவன தலைவர் அஸ்வத் நாராயணன் பெற்றுக்கொண்டார்.
ஓசூரில் பாராட்டு
விருது பெற்றுக் கொண்டு ஓசூர் திரும்பிய அத்வைத் பள்ளி நிறுவன தலைவர் அஸ்வத் நாராயணனுக்கு பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டி சிறப்பாக வரவேற்பு அளித்தனர்.