வாக்காளர் பட்டியல்
சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் 2026,
கணக்கீட்டு படிவங்கள் திரும்ப
வழங்காத வாக்காளர்கள்
எதிர்வரும் 4.12.2025 க்குள் வாக்கு சாவடி
நிலை அலுவலர்களிடம்
சமர்பிக்க வேண்டும் என
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தகவல்.
ஓசூர். நவ. 29. -
தளி சட்டமன்ற தொகுதி
கிருஷ்ணகிரி மாவட்டம்,
தேன்களிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில்,
தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,
வாக்காளர் பட்டியல்
சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் 2026,
வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள
கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து
திருப்ப பெற்று,
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்,
தன்னார்வலர்கள் மூலம் இணையதளத்தில்
பதிவேற்றம் செய்யும் பணிகள் தொடர்பாக
வாக்கு சாவடி நிலை அலுவலர்களுக்கான
மேற்பார்வையாளர்கள் (BLO- Supervisor)
ஆய்வுக் கூட்டம்
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தலைமையில்
நவ. 29-ம் தேதியன்று நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் தெரிவித்ததாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின்
அறிவுறுத்தலின் படி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
6 சட்டமன்ற தொகுதிகளில்,
வாக்காளர் பட்டியல்
சிறப்பு தீவிர திருத்தப் பணிகள்- 2026
நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 04.11.2025 முதல்
வீடுவீடாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்
மூலம் வாக்காளர்களுக்கு
கணக்கீட்டு படிவங்கள்
98.41 சதவிகிதம்
வழங்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் திரும்ப
பெறப்பட்டு
இணையதளத்தில் பதிவேற்றம்
செய்யும் பணிகள்
நடைபெற்று வருகிறது.
தளி சட்டமன்ற தொகுதியில்
மொத்தம் 2,56,108 (இரண்டு லட்சத்து ஐம்பத்தி ஆறாயிரத்து நூற்றி எட்டு) வாக்காளர்கள் உள்ள நிலையில்,
நாளதுவரை 2,52,346 கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை 2,17,901 வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்து திரும்ப பெறப்பட்ட கணக்கீட்டு படிவங்கள்
தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் தன்னார்வலர்கள் மூலம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் மாவட்டத்தில்
6 சட்டமன்ற தொகுதிகளிலும்
வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்து
பெறப்பட்ட கணக்கீட்டு படிவங்கள்
அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர்கள் தலைமையில் இணையதளத்தில் பதிவேற்றம்
செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
6 சட்டமன்ற தொகுதியில் உள்ள
16,80,626 வாக்காளர்களில்
16,53,920 வாக்காளர்களுக்கு
கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டு,
நாளது வரை 13,80,770 வாக்காளர்களிடமிருந்து
பூர்த்தி செய்து, திரும்ப பெறப்பட்டு
இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை
கணக்கீட்டு படிவங்கள்
திரும்ப வழங்காத வாக்காளர்கள் எதிர்வரும்
டிசம்பர் 4-ம் தேதிக்குள் வாக்கு சாவடி நிலை
அலுவலர்களிடம் சமர்பிக்க வேண்டுமெனவும்,
சிறப்பு தீவிர திருத்த பணிக்கு அனைத்து
வாக்காளர்களும் முழு ஒத்துழைப்பு
வழங்க வேண்டும் என
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வு கூட்டத்தில்
தளி சட்டமன்ற தொகுதி
வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும்
உதவி ஆணையர் (ஆயம்)
திரு.பழனி,
வட்டாட்சியர்
செல்வி.கங்கை
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
-------------------------------------