மூதறிஞர் இராஜாஜி
பிறந்த நாள் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஒசூர் வட்டம்,
தொரப்பள்ளி அக்ரஹாரம் கிராமத்தில்,
செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக,
மூதறிஞர் இராஜாஜி அவர்களின்
147 - வது பிறந்த நாளையொட்டி,
இராஜாஜி அவர்கள் பிறந்த இல்லத்தில்,
இராஜாஜி அவர்களின் திருவுருவ சிலைக்கு
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
ஓசூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு.ஒய்.பிரகாஷ்,
ஓசூர் மாநகராட்சி மேயர்
திரு.எஸ்.ஏ.சத்யா
ஆகியோர் இன்று (10.12.2025) மாலை அணிவித்து
மரியாதை செலுத்தினார்கள்.
இராஜாஜி அவர்களின்
நினைவு இல்ல புனரமைப்பு பணிகள்
ஜனவரி 2026 க்குள் முடிக்கப்படும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் தகவல்.
ஓசூர். டிச. 10. –
செய்தி மக்கள் தொடர்புத்துறை
மூதறிஞர் இராஜாஜி 147-வது பிறந்த நாள்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வட்டம்,
தொரப்பள்ளி அக்ரஹாரம் கிராமத்தில்,
செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக,
மூதறிஞர் இராஜாஜி
அவர்களின் 147 - வது பிறந்த நாளையொட்டி,
மூதறிஞர் இராஜாஜி அவர்கள்
பிறந்த இல்லத்தில்,
அவரது திருவுருவ படத்திற்கு
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
ஒசூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு.ஒய்.பிரகாஷ்,
ஓசூர் மாநகராட்சி மேயர்
திரு.எஸ்.ஏ.சத்யா
ஆகியோர் இன்று (10.12.2025) மலர் தூவி மரியாதை செலுத்தி,
இராஜாஜி அவர்கள்
பிறந்த இல்லத்தில் உள்ள
திருவுருவ சிலைக்கு
மாலை அணிவித்து மரியாதை
செலுத்தினார்கள்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்ததாவது:
விடுதலைப் போராட்ட வீரரான
மூதறிஞர் இராஜாஜி
அவர்கள் 10.12.1878 அன்று ஒசூர் வட்டம்,
தொரப்பள்ளி அக்ரஹாரம்
கிராமத்தில் பிறந்தார்.
இராஜாஜி அவர்கள் பிறந்த நாளான
டிசம்பர் 10-ம் தேதி அன்று
தமிழக அரசின் சார்பில் பிறந்த நாள் விழா
அவரது இல்லத்தில்
கொண்டாடப்பட்டு வருகிறது.
இராஜாஜி அவர்கள் பிறந்த இல்லத்தை
தற்போது செய்தி மக்கள் தொடர்பு துறை
மூலம் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த இல்லத்தில் மூதறிஞர் இராஜாஜி அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த சிறப்பு புகைப்படங்கள், மார்பளவு சிலை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இராஜாஜி நினைவு இல்லத்தை தமிழ்நாடு மற்றும் இதர மாநில பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நாள்தோறும் பார்வையிட்டு வருகின்றனர்.
மேலும், இராஜாஜி அவர்களின்
நினைவு இல்லத்தை ரூ.44.50 லட்சம் மதிப்பில்
பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகளை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்
14.09.2025 அன்று கிருஷ்ணகிரியில்
நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் துவக்கி
வைத்துள்ளார்கள்.
அதனடிப்படையில் இராஜாஜி அவர்களின்
நினைவு இல்லத்தில் மூங்கில், ஒடுகள் மாற்றம்
செய்து புதுப்பொலிவுடன் புனரமைப்பு பணிகள்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, கூடுதலாக மின்சார வசதி, வர்ணம் பூசும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.
இப்பணிகள் ஜனவரி 2026 க்குள்
முடிக்கப்படும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து,
மாவட்ட ஆட்சித்தலைவர்,
ஒசூர் சட்டமன்ற உறுப்பினர்,
ஓசூர் மாநகராட்சி மேயர்,
ஆகியோர்,
மூதறிஞர் இராஜாஜி அவர்களுடைய
வாழ்க்கை வரலாறு குறித்த
புகைப்படங்களை பார்வையிட்டனர்.
மேலும், இவ்விழாவில் கலந்துகொண்ட
பொதுமக்கள் மற்றும் மாணவ,
மாணவியர்களுக்கு இனிப்புகளை
வழங்கினார்.
தொடர்ந்து,
மாவட்ட ஆட்சித்தலைவர்,
ஓசூர் சட்டமன்ற உறுப்பினர்,
ஓசூர் மாநகராட்சி மேயர்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
ஆகியோர்
மூதறிஞர் இராஜாஜி
அவர்கள் படித்த
ஒசூர் ஆர்.வி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்,
அரசு பள்ளியில் 10 -ம் வகுப்பு பயிலும்
மாணவ, மாணவிகளுக்கு
அப்பாவுப்பிள்ளை
பொன்னம்மாள் அறக்கட்டளை
சார்பாக, திருக்குறள் புத்தகங்களை வழங்கினார்கள்.
மேலும்,
பள்ளிக்கல்வித்துறை மற்றும்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
இணைந்து நடத்திய
0-18 வயதுடைய பள்ளி செல்லும்
மாணவ, மாணவியர்களுக்கு தனித்துவம் வாய்ந்த
மாற்றுத்திறனாளிகளுக்கான
அடையாள அட்டை மற்றும் உபகரணங்கள்
வழங்கும் முகாமில்
5 மாற்றுத்திறனாளிகளுக்கு
தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள்
மற்றும் தலா ரூ.11,800 வீதம்
2 மாற்றுத்திறனாளிகளுக்கு
ரூ.23,600 மதிப்பிலான
சக்கர நாற்காலிகளை வழங்கினார்கள்.
இம்முகாமில் 70 மாற்றுத்திறனாளிகள்
கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில்,
ஒசூர் மாநகராட்சி ஆணையாளர்
திரு.முகம்மது ஷபீர் ஆலம் இ.ஆ.ப.,
ஒசூர் சார் ஆட்சியர்
திருமதி.ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப.,
ஓசூர் மாநகராட்சி துணை மேயர்
திரு.ஆனந்தைய்யா,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
திரு.மனோகரன்,
ஒசூர் மாமன்ற உறுப்பினர்
திரு.மாதேஸ்வரன்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்
திரு.சு.மோகன்,
பொதுப்பணித்துறை
உதவி செயற்பொறியாளர் (கட்டிடம்)
திரு.சரவணன்,
உதவி பொறியாளர்
திரு.விமல்ராஜ்,
ஒசூர் வட்டாட்சியர்
திரு.குணசிவா,
வட்டார வளர்ச்சி அலுவலர்
திரு.சிராஜூதின்,
முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்
திரு.ராமமூர்த்தி,
திரு.சீனிவாசலு
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்,
உள்ளாட்சி பிரதிநிதிகள்,
பள்ளி தலைமையாசிரியர், ஆசிரிய பெருமக்கள்,
பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்,
பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
---------------------------------------------.