ஜாக்டோ ஜியோ
ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்.
கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை
ஜாக்டோ ஜியோ
பழைய பென்சன் திட்டம் உட்பட
10 அம்ச கோரிக்கைகளை
நிறைவேற்ற வலியுறுத்தி
ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்.
ஓசூர். நவ. 18. –
ஜாக்டோ ஜியோ
10 அம்ச கோரிக்கைகள்
தேனகனிக்கோட்டை வட்டாட்சியர்
அலுவலகம் முன்பு,
தேர்தல் கால வாக்குறுதியின்படி
பழைய பென்சன் திட்டத்தை
உடனடியாக அறிவிக்க வேண்டும்
உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை
வலியுறுத்தி ஒரு நாள் அடையாள
வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ ஜியோ சார்பாக
கூட்டு தலைமையாக முருகேசன் மற்றும் திம்மப்பா ஆகியோர் தலைமை வகித்தனர்.
தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க
மேனாள் மாநில தணிக்கையாளர்
திரு. நடராஜன்
அவர்கள் ஆர்ப்பாட்டத்தை
துவக்கி வைத்து உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில்
பழைய ஓய்வூதியத் திட்டம்
1. 01.04. 2003 -க்குப் பிறகு அரசுப்பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல் படுத்த வேண்டும்.
2. ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பினைக் காரணம் காட்டி 23.08.2010-க்கு முன்னதாக பணியேற்ற ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலில் இருந்து ( TET தேர்விலிருந்து விலக்களித்து) ஆசிரியர்களை பாதுகாத்திட தமிழ்நாடு அரசு சீராய்வு மனு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
3. இடைநிலை ஆசிரியர்களுக்கு, முதுநிலை ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி
மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும்
அநீதி களையப்பட வேண்டும்.
4. தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும்
90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை
அரசாணை எண். 243. நாள் 21.02. 2023 மற்றும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறையில் அரசாணை எண். 76. நாள் 30.09.2024 ஆகியவற்றை உடனடியாக ரத்து செய்திடவேண்டும்.
5. அரசின் பல்வேறு துறைகளில் 30சதவீதம் மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில்
ஜாக்டோ சார்பாக
திரு. திம்மப்பா,
திரு. மஞ்சுநாத்,
திரு. மோகன்,
திரு. பிரான்சிஸ்,
திரு. ஜான் சங்கர்
ஆகியோரும்,
ஜியோ சார்பாக
திரு. ஜீவா,
திருமதி. சாந்தி,
திரு. ஜார்ஜ்,
திரு. சத்யா,
திரு. கதிரவன்,
திரு. ஸ்டாலின்,
திரு. ஸ்ரீதர்,
திரு. சிலம்பரசன்,
திருமதி. ஷீலா
ஆகியோரும் உரையாற்றினார்கள்.
நிறைவுரையை
திரு. முருகேசன்
அவர்களும்,
இறுதியாக
திரு. மாதேஷ்
அவர்கள் நன்றி கூறினார்.
இதில் அனைத்து துறைகளைச் சேர்ந்த சங்க தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
--------------------------------------.