கிருஷ்ணகிரி மாவட்டம்,
அஞ்செட்டி வட்டம்
பூஞ்சோலை கிராமத்தில்
அங்காள பரமேஸ்வரி
அம்மன் கோயிலில்
மயான கொள்ளை திருவிழா
பக்தர்கள் பால்குடம்
ஏந்தி ஊர்வலம்
ஓசூர். மார்ச். 2. –
அஞ்செட்டி அருகே உள்ள பூஞ்சோலை கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயான கொள்ளை திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி
அம்மன் கோயில்
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி தாலுகாவுக்கு உட்பட்ட பூஞ்சோலை கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது.
மயான கொள்ளை
இந்த கோயிலில் ஆண்டுதோறும்
மாசி மாதம் மயான கொள்ளை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும்.
இந்த ஆண்டு மயான கொள்ளை திருவிழா
மார்ச். 1-ம் தேதி நடைபெற்றது.
பால் குடம் ஊர்வலம்
திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க பால்குடங்களுடன் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்தில் பக்தர்கள் வண்ணத்துப்பட்டியிலிருந்து புறப்பட்டு, பூஞ்சோலை கிராமத்தில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயிலை வந்தடைந்தனர்.
பாலாபிஷேகம்
அம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும் வண்ணமலர்களால், சிறப்பு அலங்காரம் செய்து, மகா மங்களாரத்தி தீப ஆராதனை நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த மயான கொள்ளை விழா, கோயில் உரிமையாளர் மணிகண்டன் தலைமையில் ஊர் மக்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் அஞ்செட்டி சுற்றுப்புற கிராமத்தில் உள்ள ஏராளமான தாய்மார்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
------------------------------------------------------.