ஒன்றிய அளவில்
கலைத்திருவிழா போட்டிகள்
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
ஒன்றிய அளவில்
கலைத் திருவிழா போட்டிகளில்
வென்ற மாணவர்களுக்கு
பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்
பாராட்டு விழா
ஓசூர். அக். 23. –
ஓசூரில் ஒன்றிய அளவில் நடந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு
தலைமையாசிரியர்
பொன் நாகேஷ்
சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கி
பாராட்டினார்.
மாவட்டத்தில் சிறந்த அரசுப்பள்ளி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பேடரப்பள்ளி, 3-வது வார்டில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இந்தப்பள்ளியில்1-வது வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை 880 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இங்கு தமிழ் மற்றும் ஆங்கில வழியில்
நல்லொழுக்கத்துடன்,
தரமான கல்வி கற்பிக்கப்படுகிறது.
இதனால் இந்த அரசுப்பள்ளி மாவட்டத்தில் உள்ள சிறந்த அரசுப்பள்ளிகளில் ஒன்றாக திகழ்கிறது.
ஒன்றிய அளவில்
கலைத்திருவிழா போட்டிகள்
ஓசூரில் அக்டோபர் 14, 15-ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள், ஒன்றிய அளவில் கலைத்திருவிழா போட்டிகள் அரசுப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கிடையே நடத்தப்பட்டது.
இந்த கலைத்திருவிழா போட்டிகள்
1-ம் வகுப்பு முதல் -5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு
முத்துராயன் ஜி. பி.
தொடக்கப்பள்ளியிலும்,
6-ம் வகுப்பு முதல் -8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவர்களுக்கு
ஓசூர் ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும்
நடத்தப்பட்டது.
இந்த ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா போட்டிகளின்
முடிவுகள் அக்டோபர் 22-ம் தேதியன்று அறிவிக்கப்பட்டது.
இந்த கலைத்திருவிழா போட்டிகளில்
பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் பங்கேற்று
ஒன்றிய அளவில் முதலிடம்
இரண்டாவது இடம் மற்றும் மூன்றாவது இடம்
பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற
4 மாணவர்கள்
5 மாணவியர்களுக்கு
பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில்
தலைமையாசிரியர்
பொன் நாகேஷ்
தலைமை வகித்து வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கி பாராட்டினார்.
வெற்றி பெற்ற மாணவர்கள்
Kalaithiruvizha 2025-2026 - BLOCK LEVEL WINNERS LIST
CLASS 1&2
Tamil Rhymes (ஒப்புவித்தல்)
SAI PRIYA .S - II A 🥇 First
Colouring
(வண்ணம் தீட்டுதல்)
VIAM MAHATO .P - II B 🥇first
களிமண் பொம்மைகள் செய்தல்
SUBIKSHA. D - II C 🥈
--------------------
CLASS 3 - 5
தனி நடிப்பு
Mono Acting
SUMAN .R - V A 🥇 first
பரதநாட்டியம் தனி
SHANJINI .M - V A 🥇first
மாறுவேட போட்டி
SUMAN .R - V A 🥉
-----------------
CLASS 6 - 8
பாவனை நடிப்பு தனி (Miming)
VETRIVEL .A - VIII 🥇first
பல குரல் பேச்சு
SUBRATMOHANTY .P - VII 🥈
தனி நபர் நடிப்பு
VIDYASRI .M - VI 🥈
கிராமிய நடனம் தனி
SATHIYAPRIYA. M - VIII
ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளிலும் கலந்து கொண்டு முதலிடம் பெற வேண்டும் என்று தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளை வாழ்த்தினார்கள்.
---------------------------------------------------.