கிருஷ்ணகிரி மாவட்டம்
முதலமைச்சரின் உத்தரவின்படி
துணை முதல்வரின் வழிகாட்டுதலோடு
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி
கட்சிகளின் சார்பில்
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல்
சிறப்பு தீவிர திருத்தம் (S.I.R)
கொண்டு வந்துள்ள
இந்திய தேர்தல் ஆணையத்தை
கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஓசூர். நவ. 11. –
கிருஷ்ணகிரியில் திமுக தலைமையில் உள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில்
தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் – 2026- கொண்டு வந்துள்ள இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை முன்பு நவ.11-ம் தேதி காலை 10 மணிக்கு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும்,
ஓசூர் எம்எல்ஏ வுமான
ஒய். பிரகாஷ்
முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில்
கிருஷ்ணகிரி மக்களவை
எம்.பி. கோபிநாத்,
கிருஷ்ணகிரி பர்கூர்
எம்எல்ஏ மதியழகன்,
ஓசூர் மாநகராட்சி
மேயர் எஸ்.ஏ. சத்யா,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
தளி எம்எல்ஏ டி.ராமசந்திரன்
உட்பட பலர் கண்டன உரையாற்றினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள 2002-05 வாக்காளர் பட்டியல்கள் குழப்பமாக அமைந்துள்ளது. ஆகவே எஸ்.ஐ.ஆர். சீராய்வை தேர்தல் ஆணையம் உடனடியாக கைவிட வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டத்தில்
திமுக இளைஞரணி
மாநில துணை செயலாளர்
சீனிவாசன்,
மற்றும் மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம், உட்பட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளும் தொண்டர்களும் திராளாக கலந்து கொண்டனர்.
----------------------------.