ஜோதி தமிழ்
செய்திகள்
இணைய இதழ்
மலர் - 1. இதழ்கள் - 285
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் வட்டம்
ஓசூரில் அட்மா திட்டத்தில்
வட்டார தொழில்நுட்ப
ஆலோசனை குழு கூட்டம்
செய்தி ஆசிரியர் - ஜோதி ரவிசுகுமார்,M.A.
ஓசூர் வட்டம்
ஓசூரில் அட்மா திட்டத்தில்
வட்டார தொழில்நுட்ப
ஆலோசனை குழு கூட்டம்
செய்தி ஆசிரியர் - ஜோதி ரவிசுகுமார்,M.A.
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் வட்டம்
ஓசூரில் அட்மா திட்டத்தில்
வட்டார தொழில்நுட்ப
ஆலோசனை குழு கூட்டம்
ஓசூர். ஜுலை. 10. –
அட்மா திட்டம்
ஒசூர் வட்டாரத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் (அட்மா) கீழ் வேளாண்மை விரிவாக்க மையம்,
ஒசூரில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனை குழு கூட்டம் 07.07.2025 அன்று நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில்
ஓசூர் வேளாண்மை உதவி இயக்குநர்
திருமதி.அ.புவனேஸ்வரி
அவர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து இனங்களைப் பற்றி விரிவாக விளக்கமளித்து
விதை நேர்த்தி
செய்வதினால் உண்டாகும் நன்மைகள் மற்றும்
இயற்கை விவசாயத்தை பயன்படுத்துமாறும்,
பஞ்சகாவியா,
கனஜீவாமிருதம்,
மண்புழு உரம்,
இயற்கை பூச்சி விரட்டி,
தயாரிக்கும் முறைகள் பற்றியும்
பயன்படுத்தும் விதம், பயன்கள் பற்றியும், இயற்கை விவசாயத்தில் விளையும் பொருட்களுக்கு அதிக மதிப்பு உண்டு என கூறி இதன் மூலம் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றி விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.
ஓசூர் வேளாண்மை அலுவலர்
திருமதி.தென்றல்
அவர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு
உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்களின் பயன்கள் பற்றியும்,
சொட்டு நீர் பாசனத்தின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் பற்றி
விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.
ஓசூர் துணை வேளாண்மை அலுவலர்
திரு.எம்.முருகேசன்
அவர்கள் வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும
மானியத்திட்டங்கள் பற்றியும்,
கோடை உழவு செய்வதின் முக்கியத்துவம்
மற்றும்
பயன்கள் பற்றியும்
விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.
ஓசூர் உதவி தோட்டக்கலை அலுவலர்
திரு.திருவேங்கடம்
அவர்கள் தோட்டக்கலைத்துறையில் செயல்படும்
மானியத்திட்டங்கள் பற்றியும்,
பசுமைக்குடில் அமைப்பதின்
பயன்கள் பற்றியும்
விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.
ஓசூர் உதவி பொறியாளர்
திருமதி.இந்துமதி
அவர்கள் வேளாண்மை பொறியியல் துறையில் கொடுக்கப்படும்
மானியத்திட்டங்கள்
மற்றும்
வேளாண் இயந்திரங்கள் வாடகை விவரங்கள்,
பயன்கள் பற்றியும்
விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.
ஓசூர் பட்டு வளர்ச்சித்துறை
உதவி ஆய்வாளர்
திரு.நவீன்குமார்
அவர்கள் பட்டுவளர்ச்சித்துறையில் கொடுக்கப்படும்
மானியத் திட்டங்கள்
மற்றும்
மல்பெரியில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு தொழில்நுட்ப முறைகள் பற்றி
விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.
ஓசூர் உதவி வேளாண்மை அலுவலர்
திரு.சத்தியமூர்தத்தி
அவர்கள்
வேளாண் வணிகம்
மற்றும்
விற்பனைத்துறையில் செயல்படும் மானியத்திட்டங்கள் பற்றியும்
விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.
உதவி வேளாண்மை அலுவலர்கள்
திரு.ஆறுமுகம்,
திரு.வெங்கடேஷ்,
திரு.கோவிந்தசாமி,
ஆகியோர் இப்பயிற்சியில் கலந்து கொண்டு
பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் முக்கியத்துவம்,
உழவன் செயலி பயன்கள் பற்றி
விளக்கமளித்தார்கள்.
அட்மா திட்ட வட்டார
தொழில்நுட்ப மேலாளர்
திருமதி.சோ.சுகுணா
அட்மா திட்டத்தில் கொடுக்கப்படும் மானியத்திட்டங்களான
உள் மாவட்ட பயிற்சி,
செயல்விளக்கம்
மற்றும்
சுற்றுலாவின் பயன்கள்
பற்றி கூறினார்.
உதவி தொழில்நுட்ப மேலாளர்
செல்வி.ஆ.காவியா
இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை
செய்திருந்தார்.
--------------------------------------.