கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் வட்டம்
அச்செட்டிப்பள்ளி கிராமத்தில்
வேளாண் முன்னேற்ற குழு
பயிற்சி முகாம்
ஓசூர் வேளாண்மை
உதவி இயக்குநர் பங்கேற்பு
ஓசூர். ஜுலை. 10. –
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்
ஒசூர் வட்டம் வேளாண்மைத்துறையின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலமாக அச்செட்டிப்பள்ளி ஊராட்சியில் அனைத்து சமூக நிலை வேளாண் உழவர்களைக் கொண்டு
40 விவசாயிகளுக்கு
பயிற்சி முகாம் நடைபெற்றது.
இப்பயிற்சி முகாமில்
ஓசூர் வேளாண்மை உதவி இயக்குநர்
திருமதி.அ.புவனேஸ்வரி
அவர்கள் தலைமை வகித்து
தொடங்கி வைத்தார். தொடர்ந்து
கலைஞரின் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் குறித்தும்,
உயிர் உரங்களின் முக்கியத்துவம் பற்றியும்
விவசாயிகளுக்கு புரியும் வகையில் விளக்கமளித்தார்.
ஓசூர் அதியமான் வேளாண் கல்லூரி
உதவி பேராசிரியர்
திரு.ராகுல் குமார்
அவர்கள் பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு
விதை நேர்த்தி செய்வதின் முக்கியத்துவம்
மண் மாதிரி சேகரிக்கும் தொழில்நுட்ப முறைகள் மற்றும் பயன்கள் பற்றியும்,
மண்வள மேலாண்மையின் முக்கியத்துவம் பற்றியும்
விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.
ஓசூர் துணை வேளாண்மை அலுவலர்
திரு.எம்.முருகேசன்
அவர்கள்
கோடை உழவின் முக்கியத்துவம் பற்றியும்,
வேளாண்மைத்துறையில் செயல்படும் மானியத்திட்டங்கள் பற்றியும்,
இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் மற்றும் சொட்டு நீர் பாசனத்தின் பயன்கள் பற்றியும்
விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.
ஓசூர் உதவி வேளாண்மை அலுவலர்
திரு.ஆறுமுகம்
அவர்கள்
ராகி மற்றும் துவரை சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றியும்,
பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் பயன்கள் பற்றியும்
விவசாயிகளுக்கு விவரமாக
விளக்கி கூறினார்.
ஓசூர் வட்டார அட்மா தொழில்நுட்ப மேலாளர்
திருமதி. சோ.சுகுணா
அவர்கள்
உழவன் செயலி முக்கியத்துவம்,
பயன்படுத்தும் முறைகள் பற்றி
விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.
இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை
உதவி தொழில்நுட்ப மேலாளர்
செல்வி.ஆ.காவியா
செய்திருந்தார்.
------------------------------------------------.