கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
பேடரப்பள்ளியில்
புதிய மாணவர் சேர்க்கையில்
ஐந்தாவது நாளே
சதம் அடித்த அரசு நடுநிலைப்பள்ளி
புதிய மாணவர்களுக்கு
தலைமையாசிரியர் பாராட்டு
ஓசூர். ஜுன். 6. -
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பேடரப்பள்ளி மூன்றாவது வார்டில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
மாவட்டத்தில் சிறந்த அரசுப்பள்ளி
பேடரப்பள்ளி
அரசு நடுநிலைப்பள்ளியில் 900-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்
கல்வி பயின்று வருகின்றனர்.
தரமான கல்வி
இங்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் நல்லொழுக்கத்துடன் தரமான கல்வி கற்பிக்கப்படுகிறது.
மேலும் இந்த அரசுப்பள்ளி,
மாணவர்கள் சேர்க்கை,
மாணவர்கள் அதிகமான தேர்ச்சி,
போட்டிகளில் வெற்றி,
என அனைத்து பிரிவுகளிலும் மாவட்டத்திலேயே முன்னிலை பெற்று
சிறந்த பள்ளியாக திகழ்கிறது.
இதனால் பேடரப்பள்ளி அரசுப்பள்ளியில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருவதால், இந்தப்பள்ளியில் ஆண்டுக்கு ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
இந்த அரசுப்பள்ளியில் கடந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பு முதல்
எட்டாம் வகுப்பு வரை பயின்ற
895 மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டது.
இதில் 114 மாணவர்கள் எட்டாம் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்புக்கு அருகில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கை பெற்றுள்ளனர்.
200 புதிய மாணவர்கள் இலக்கு
நடப்பு கல்வியாண்டில் 200 மாணவர்களை புதியதாக பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் திட்டமிடப்பட்டு, அதற்கான பணியில் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில்
2025-ம் ஆண்டு ஜுன் – 2-ம் தேதி திங்கட்கிழமை பள்ளி திறக்கப்பட்ட
முதல் நாளில்
781 மாணவ, மாணவிகளுக்கு
விலை இல்லா பாடப்புத்தகங்கள்,
சீருடைகள்,
ஆகியவற்றை
ஓசூர் சட்டமன்ற உறுப்பினர்
ஒய். பிரகாஷ்
அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.
108 புதிய மாணவர்கள் சேர்க்கை
தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் தீவிர முயற்சியால் பள்ளி திறந்து ஐந்தாவது நாளன்று புதிய மாணவர்கள் சேர்க்கை 108 ஆக உயர்ந்துள்ளது.
இதில்
முதல் வகுப்புக்கு 43 மாணவர்களும்,
இரண்டாம் வகுப்புக்கு 12 மாணவர்களும்,
ஆறாம் வகுப்புக்கு 27 மாணவர்களும்,
மற்ற வகுப்புகளுக்கு 26 மாணவர்களும்,
என புதிதாக
108 மாணவர்கள்
பேடரப்பள்ளி அரசுப்பள்ளியில் சேர்ந்து உள்ளார்கள்.
புதிய மாணவர்களுக்கு
பரிசு வழங்கி பாராட்டு
ஜுன் 6-ம் தேதியன்று பள்ளிக்கு
வருகை தந்த புதிய மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில்
தலைமை ஆசிரியர்
பொன் நாகேஷ்
முதல் மற்றும் இரண்டாம் வகுப்புக்கு
சேர்க்கை பெற்றுள்ள 55 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்வில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள்
எப்சி ஜாய்ஸ் மேரி
அபிராமி
ஆகியோரும் கலந்து கொண்டு புதிய மாணவர்களை பாராட்டினார்கள்.
----------------------------------------.