கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
ஓசூர் வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு
வயல் விழா பயிற்சி
ஓசூர். செப்டம்பர். 8. -
அட்மா திட்டம்
வயல் விழா பயிற்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு மாநில விரிவாக்க உறுதுணை சீரமைப்பு (அட்மா) திட்டத்தின் கீழ் தேவிசெட்டிப்பள்ளி கிராமத்தில்
வயல்விழா பயற்சியை
ஓசூர் வேளாண்மை உதவி இயக்குநர்
திருமதி. அ. புவனேஸ்வரி
அவர்கள் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் மற்றும் சூடோமோனாஸ் பயன்கள் பற்றி விவசாயிகளுக்கு புரியும் வகையில் விளக்கி கூறினார்.
இந்த பயிற்சியில் ஓசூர் அதியமான் வேளாண் கல்லூரி,
உதவி பேராசிரியர்
திருமதி.கீர்த்தனா
அவர்கள் பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு
மண் மாதிரி சேகரிக்கும் முறைகள்,
மண்வள மேலாண்மையின் முக்கியத்துவம்,
ஊட்டச்சத்து மேலாண்மை
மற்றும்
ஒருங்கிணைந்த பூச்சி,
நோய் மேலாண்மை முறை பற்றியும்,
இயற்கை உரங்கள் தயாரிப்பு,
பயன்படுத்தும் விதம் மற்றும் பயன்கள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.
ஓசூர் துணை வேளாண்மை அலுவலர்
திரு.எம்.முருகேசன்
அவர்கள்
ஊட்டமேற்றிய தொழுஉரத்தின் முக்கியத்துவம்,
மண்புழு உரம் தயாரிப்பு பற்றியும்,
PMKISAN திட்டத்தில் பயன்பெற செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றியும்,
சொட்டு நீர் பாசனத்தின் முக்கியத்துவம்
மற்றும் பயன்கள் பற்றி
விவசாயிகளுக்கு புரியும் வகையில் விளக்கமளித்தார்.
ஓசூர் உதவி வேளாண்மை அலுவலர்
திரு.வெங்கடேஷ்
அவர்கள்
வரப்பு பயிர் முக்கியத்துவம்,
துவரை நாற்று நடவு சாகுபடி
தொழில்நுட்பங்கள் பற்றியும்,
ஊடு பயிர் பயன்கள் பற்றியும்,
காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தும்
தொழில்நுட்ப முறைகள் பற்றியும்
விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.
ஓசூர் வட்டார தொழில்நுட்ப மேலாளர்
திருமதி.சோ.சுகுணா
அவர்கள்
உழவன் செயலியின் முக்கியத்துவம்,
பயிர்காப்பீடு செய்வதின் பயன்கள் பற்றியும்,
மண்புழு உரம் தயாரிக்கும் தொழில்நுட்ப முறைகள் மற்றும் பயன்கள் பற்றி
விவசாயிகளுக்கு கூறினார்.
மேலும் வேளாண்மைத்துறையில் மானியத்தில் கொடுக்கப்படும்
உயிர் உரங்கள்,
நுண்ணூட்ட உரங்கள்,
விதைகள்
போன்ற பொருட்கள் விவசாயிகளின் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது.
பின்பு கலந்து கொண்ட விவசாயிகளுக்கு
துண்டு பிரசுரங்கள்
விநியோகம் செய்யப்பட்டது.
உதவி தொழில்நுட்ப மேலாளர்
செல்வி.காவியா
அவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பஞ்சகாவியா தயாரிக்கும் முறை மற்றும் வயலில் இடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி செயல்விளக்கம் செய்து காண்பித்தார், அட்மா திட்டத்தின் பயன்பாடுகள் மற்றும் செயல்விளக்கங்கள் பற்றி கூறினார்.
---------------------------------------.