கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மறைவட்ட அளவிலான
யூபிலி கொண்டாட்டம்
யூபிலி 2025
ஓசூர் தூய இருதய ஆண்டவர்
ஆலயத்தில்
யூபிலி திருப்பலி
கொண்டாட்டம்
மற்றும்
யூபிலி திருச்சிலுவை திருப்பயண
தொடக்க விழா.
தருமபுரி மறைமாவட்ட
ஆயர் பங்கேற்பு.
ஓசூர். பிப்ரவரி. 10. –
ஓசூர் தூய இருதய ஆண்டவர்
ஆலயத்தில் ஓசூர் மறைவட்ட அளவிலான யூபிலி திருச்சிலுவை
திருப்பயண தொடக்க விழா நடைபெற்றது.
யூபிலி ஆண்டு
1475-ம் ஆண்டு
திருத்தந்தை ஆறாம் சிக்ஸ்துஸ்
என்பவரால்
25 ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறப்பிக்கப்படும் யூபிலியானது, முதன்முறையாக கொண்டாடப்பட்டது.
மாபெரும் யூபிலி
அந்த வகையில் மாபெரும் யூபிலி ஆண்டு என்று 2000-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
2015-ம் ஆண்டு யூபிலி கொண்டாட்டத்தின் பொன் மொழி எதிர்நோக்கின் திருப்பயணிகள்
உறுதியில்லா நிலை மற்றும் துன்பங்களை உருவாக்கிய பெரும் தொற்று மற்றும் போர்களின் மத்தியில் எதிர் நோக்கின்
முக்கியத்துவத்தை நம்
திருத்தந்தை பிரான்சிஸ்
கோடிட்டு காட்டுகிறார்.
கற்றறிந்து கொள்,
இறை வேண்டல் செய்,
எழுந்து நட,
என்ற கருத்துகளை சிந்தையில்
நிறுத்தி இரண்டு ஆண்டுகளாக நம்மையே தயாரித்து,
யூபிலி 2025-ம் ஆண்டில் அடி எடுத்து
வைத்திருக்கிறோம்.
எதிர்ப்பார்ப்பை மீட்டெடுக்கவும்,
தக்க வைக்கவும்,
மற்றவர்களுக்கு வழங்கவும்,
நம்மை அழைக்கிறது யூபிலி 2025.
தருமபுரி மறைமாவட்ட அளவில்
2025 யூபிலி ஆண்டு தொடக்க விழா,
கிருஷ்ணகிரி,
புனித பாத்திமா அன்னைத் திருத்தலத்தில்
கடந்த 2024-டிசம்பர் 29 அன்று
மறைமாவட்ட ஆயரால் தொடங்கி வைக்கப்பட்டது.
ஓசூர் மறைவட்ட அளவில்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி,
ஓசூர் – தேன்கனிக்கோட்டை சாலையில்
தூய இருதய ஆண்டவர் ஆலயம் அமைந்துள்ளது.யூபிலி ஆண்டு (2025) முன்னிட்டு
ஓசூர் மறை வட்ட அளவிலான
யூபிலி திருப்பலிக் கொண்டாட்டம்
மற்றும் யூபிலி திருச்சிலூவை திருப்பயண தொடக்கவிழா பிப்ரவரி 9-ம் தேதி மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்றது.
இந்த விழாவில்
தருமபுரி மறைமாவட்ட ஆயர்
முனைவர். லாரன்ஸ் பயஸ்
தலைமை வகித்து,
ஓசூர் மறைவட்ட அளவிலான
யூபிலி திருச்சிலூவை திருப்பயணத்தை தொடங்கி வைத்தார்.
திருச்சிலூவை பவனி
இதில் முதல் நிகழ்வாக
மாலை 5.30 மணிக்கு திருச்சிலூவைப் பவனி நடைபெற்றது.
இந்த திருச்சிலூவை பவனியில்
அலங்கரிக்கப்பட்ட தேரில் திருச்சிலூவையில் இறை இயேசு, ஆலயத்தைச் சுற்றிலும் பவனியாக வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
யூபிலி LOGO
இந்த பவனியில் பக்தர்கள்
யூபிலி லோகோ மற்றும்
யூபிலி ஆண்டுக்கான வாசகங்கள் அச்சிடப்பட்ட
பதாகைகளை ஏந்தியும், ஊர்வலமாக வந்தனர்.
திருச்சிலூவை மந்தரிப்பு
மாலை 6 மணிக்கு
திருச்சிலுவை மந்தரிப்பு மற்றும் யூபிலி கதவு திறத்தல் நடைபெற்றது.
தொடர்ந்து
மாலை 6.15 மணிக்கு யூபிலி திருப்பலி கொண்டாட்டம் நடைபெற்றது.
இதில் ஓசூர் மறைவட்டத்தில் உள்ள 7 பங்கிலிருந்து,
வாசக முன்னுரைகள்,
வாசகங்கள்,
மன்றாட்டுகள்,
படிக்கப்பட்டது.
இந்த திருப்பலியில் ஆயர் தலைமை வகித்து
யூபிலி ஆண்டின் சிறப்பு திருப்பலி,
சிறப்பு மறையுரை நிகழ்த்தினார்.
படம் விளக்கம் - யூபிலி திருச்சிலுவையை தருமபுரி மறை மாவட்ட ஆயர் முனைவர் லாரன்ஸ் பயஸ்
வழங்க, மத்திகிரி தூய ஆரோக்கிய அன்னை ஆலய
பங்கு தந்தை கிறிஸ்டோபர் பெற்றுக்கொண்டார்.
உடன் ஓசூர் மறைவட்ட
முதன்மை குரு
அருட்பணி பெரியநாயகம் உள்ளார்.
படம் விளக்கம் - யூபிலி திருச்சிலுவையுடன்
டிவைன் நகர் - குழந்தை யேசுவின்
தெரசா ஆலய பங்கு மக்கள்.
அதைத்தொடர்ந்து
ஓசூர் மறைவட்டத்தில் உள்ள
1. பாகலூர் – டான் போஸ்கோ
மிஷன் ஆலயம்.
2. சூளகிரி – அன்னை
வேளாங்கண்ணி ஆலயம்.
3. ஒன்னல்வாடி – சகாயமாதா
ஆலயம்.
4. ஓசூர் - தூய இருதய ஆண்டவர் ஆலயம்.
5. டிவைன் நகர் – குழந்தை இயேசுவின்
தெரசா ஆலயம்.
6. சிப்காட் – லூர்து அன்னை ஆலயம்.
7. மத்திகிரி - தூய ஆரோக்கிய
அன்னை ஆலயம்.
ஆகிய 7 ஆலயங்களுக்கு
மந்தரிக்கப்பட்டு
யூபிலி லோகோ பதிக்கப்பட்ட திருச்சிலுவையை
ஆயர் முனைவர் லாரன்ஸ் பயஸ் வழங்கினார்.
அன்பின் விருந்து
இரவு 8 மணிக்கு திருப்பயணிகளுக்கு
யூபிலி ஆண்டு முன்னிட்டு அன்பின்
விருந்து வழங்கப்பட்டது.
இந்த யூபிலி விழா ஏற்பாடுகள்
ஓசூர் மறைவட்ட முதன்மை குரு
அருட்பணி
பெரியநாயகம்
தலைமையில்
சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.
இந்த யூபிலி 2025 கொண்டாட்டத்தில்
ஓசூர் மறைவட்டத்தில் உள்ள
அனைத்து பங்குகளில் இருந்து
குருக்கள்,
துறவியர்,
அருட்சகோதரிகள்,
இறைமக்கள்,
திரளாக கலந்து கொண்டனர்.
----------------------------------------------------.