ஓசூர் மாநகராட்சி 28-வது வார்டு
சானசந்திரம் அரசுப்பள்ளிக்கு
பஞ்சாப் நேஷ்னல் வங்கி சார்பில்
ரூ.25 லட்சம் மதிப்பில்
மேசை, நாற்காலிகள் நன்கொடை
மேயர் பங்கேற்பு
ஓசூர். டிச. 06. –
சானசந்திரம் மாநகராட்சி
துவக்கப்பள்ளி
ஓசூர் சானசந்திரம் மாநகராட்சி துவக்கப்பள்ளிக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியின் சார்பில் ரூ.25லட்சம் மதிப்பில் மேசை, நாற்காலிகள் வழங்கும்
நிகழ்ச்சி நடைபெற்றது.
மேயர் எஸ்.ஏ.சத்யா
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி
28-வது வார்டில் உள்ள சானசந்திரம்,
வ.உ.சி நகரில் மாநகராட்சி துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த அரசுப்பள்ளிக்கு 500 மேசை, நாற்காலிகளை ரூ. 25லட்சம் மதிப்பில் சிஎஸ்ஆர் நிதியில் இருந்து பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் நன்கொடையாக வழங்கப்
பட்டுள்ளது.
இதற்கான நிகழ்ச்சி சானசந்திரம் அரசு துவக்கப்பள்ளியில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மேயர் எஸ்.ஏ.சத்யா பங்கேற்று, அரசுப்பள்ளிக்கு மேசை மற்றும் நாற்காலிகளை வழங்கினார்.
இதில் துணை மேயர் ஆனந்தய்யா, கோயம்புத்தூர் பஞ்சாப் நேஷனல்
வங்கியின் துணை பொது மேலாளர் கே.மீராபாய், ஓசூர் பஞ்சாப் நேஷனல் வங்கியின் முதுநிலை மேலாளர் பிரபாகரன், மாமன்ற உறுப்பினர்கள் தேவிமாதேஷ், சசிதேவ், செயற்பொறியாளர் நாராயணன், கணக்கு அலுவலர் சரவணன், இளநிலை பொறியாளர் செந்தில்குமார்
மற்றும் சங்கர், பகுதி செயலாளர் ராமு, வட்ட கழக செயலாளர்கள் ராஜேந்திரன், ஜான், மஞ்சுநாத், பிரபாகர், அல்லாபகாஷ், கிருஷ்ணாரெட்டி, மற்றும் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.