தமிழ்நாடு அரசு
நெடுஞ்சாலைத்துறை சார்பில்
தேன்கனிக்கோட்டையில்
தேசிய சாலை பாதுகாப்பு
மாதம் - 2025
விழிப்புணர்வு பேரணி
ஓசூர். ஜனவரி. 10. –
தேசிய சாலை பாதுகாப்பு மாதம் – 2025
கிருஷ்ணகிரி கோட்டம், தேன்கனிக்கோட்டை உட்கோட்டம், தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை சார்பில்
தேசிய சாலை பாதுகாப்பு மாதம் – 2025,
முன்னிட்டு தேன்கனிக்கோட்டையில்
விழிப்புணர்வு பேரணி ஜனவரி 9-ம் தேதி நடைபெற்றது.
இந்த பேரணிக்கு தேன்கனிக்கோட்டை, நெடுஞ்சாலைத்துறை
உதவிகோட்ட பொறியாளர்
கவிதா
தலைமை வகித்தார்.
உதவி பொறியாளர்
நவீன்குமார்
முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக
தேன்கனிக்கோட்டை உட்கோட்டம்
காவல் துணை கண்காணிப்பாளர்
ஆனந்தராஜ்
தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர்
கோகுல்ராஜ்
ஆகியோர் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தனர்.
விழிப்புணர்வு வாசகங்கள்
இந்த பேரணியில் சாலை ஆய்வாளர்கள் முருகேசன், பழனிவேலன், கருணாகரன், பெருமாள், குமார் மற்றும் சாலை பணியாளர்கள்,
நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஆகியோர் திரளாக பங்கேற்று விழிப்புணர்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தி, விழிப்புணர்வு வாசகங்களை முழக்கமிட்டபடி
ஊர்வலமாக சென்றனர்.
இந்த பேரணி கோட்டைவாசல் பகுதியில் இருந்து புறப்பட்டு நகரின் பிரதான சாலைகள் வழியாக பயணித்து இறுதியில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நிறைவடைந்தது.