“ஆன்மீக சமூகநீதி சேவை விருது”
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
பத்ர காசி சத்ய சன்மார்க்க
ஞானசபை
(ஓம் ஐஸ்வர்ய பைரவ
அறக்கட்டளை) சார்பில்
அருள்நிதி.
திரு.தி.ஸ்ரீராஜேந்திரன்
அவர்களின் சிறந்த சேவையை
பாராட்டி
“ஆன்மீக சமூகநீதி சேவை விருது”
வழங்கி கௌரவிப்பு.
ஒசூர். பிப். 10. –
ஓசூர் மாநகரில் அமைந்துள்ள
பத்ர காசி சத்ய சன்மார்க்க ஞானசபை
(ஓம் ஐஸ்வர்ய பைரவ அறக்கட்டளை)
சார்பில்
2025-26-ம் ஆண்டிற்கான
சிறந்த ஆன்மீக
சேவையை பாராட்டி
அருள்நிதி
திரு.T.ஸ்ரீராஜேந்திரன்
அவர்களுக்கு
“ஆன்மீக சமூகநீதி சேவை விருது”
வழங்கி கவுரவித்து
சான்றிதழ் அளிக்கப்பட்டது.
அருள்நிதி
திரு.T.ஸ்ரீ ராஜேந்திரன்
அவர்கள் , நாகப்பட்டினம் காமேஸ்வரத்தில்
பிறந்து வேலைத்தேடி
கடந்த 1998-ம் ஆண்டு ஓசூர் நகருக்கு வந்தார்.
இவர் ஓசூரில் வேலை பார்த்த காலகட்டத்தில் தொழிலையும் செய்து தொண்டையும் செய்து , இரண்டையும் இரு கண்களாக பாவித்து வந்தார்.
விளம்பரத்தை எதிர்ப்பார்க்காமல்
அமைதியான முறையில்
குழுக்களுடனும், குடும்பத்துடனும்
சேவை செய்தவர்
திரு.T. ஸ்ரீ ராஜேந்திரன்.
இவர் ஒசூரில்
இயற்கை வாழ்வியல்,
மண்குளியல்,
சுற்றுலா,
உடல்நல பயிற்சிகள்,
யோகா,
மரம் நடுதல்,
அரசுக்கு உதவியாக
விழிப்புணர்வு நிகழ்வுகள்,
பௌர்ணமி தோறும்
மும்மூர்த்தி கிரிவல நிகழ்வுகள்,
அறக்கட்டளையை சார்ந்து
சமூக சேவைகள்
என இப்படியாக பல பல அறிய சேவைகளை செய்தவர்.
குறிப்பாக சொன்னால்…
ஒசூரில் மனவளக்கலை என்ற
“வாழ்க வளமுடன்”
இயக்கத்தினை ஸ்தாபித்தவர்.
உலகத்திலேயே சிருஷ்டி கர்த்தாவாகிய
பிரம்ம தேவர் ஆலயம் மலை மேல்
இருப்பது எனில்
அது இவரின் அயராத பெரும் உழைப்பு
தான் காரணம்.
இதனை யாராலும் மறுக்க முடியாது.
ஜீவகாரூண்ய விருது
அதற்காக கடந்த 13.01.2025-ம் தேதி
தமிழக ஆளுநர் மாண்புமிகு
திரு. R.N.ரவி
அவர்கள்
“ஜீவகாரூண்ய விருது”
அளித்து பாராட்டினார்.
அதனையடுத்து 2025-26-ம் ஆண்டிற்கான
சிறந்த சேவைக்கான
சாதனையாளர் விருதினை
பத்ர காசி சத்ய சன்மார்க்க ஞானசபை
(ஓம் ஐஸ்வர்ய பைரவ அறக்கட்டளை)
சார்பில்
அருள்நிதி
திரு. T. ஸ்ரீராஜேந்திரன்
அவர்களின் சிறந்த சேவையை
பாராட்டி
கடந்த 01.02.2026-ம் தேதியன்று
ஒசூர் சிவன்மலை அடிவாரம்
வள்ளலார் சன்மார்க்க சபையில்
தைபூச திருவிழாவின் போது
“ஆன்மீக சமூகநீதி
சேவை விருது”
அளித்து
அந்த அறக்கட்டளையின் தலைவர்,
நிறுவனருமான
திரு. சிவ பைரவ சின்னசாமி
அவர்கள் ஆசீர்வதித்து அளித்தார்கள்.
இந்த விழாவில்
உயர்திரு.
K.A.மனோகரன்.Bsc. Ex.MLA.
உயர்திரு.
நாகராஜ் BJP.
திரு. லோகநாதன்,
திருமதி. முத்துலட்சுமி,
தமிழ்நாடு மகளிர் விவசாயிகள் சங்கத்தலைவி,
திரு. பாபு.
திரு. சென்னப்பா,
ஆகியோர் கலந்து கொண்டனர்.
------------------------------------------.