கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மேக்னம் அரிமா
சங்கம் சார்பில்
14-வது புத்தகத்திருவிழாவில்
இரண்டாவது
மாபெரும் ரத்த தானம் முகாம்
52 யூனிட் ரத்தம் நன்கொடை
ஓசூர் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது
அரிமா மகளிர் பங்கேற்பு
ஓசூர். ஜுலை. 20. –
ஓசூர் 14-வது புத்தகத்திருவிழாவின்
10-வது நாளில்(20-7-25)
ஓசூர் மேக்னம் அரிமா சங்கம் சார்பில்
இரண்டாவது முறையாக நடந்த
ரத்த தானம் முகாமில்
வாசகர்கள் பங்கேற்று
52 யூனிட் ரத்தம் தானமாக வழங்கினர்.
முதல் மாபெரும்
ரத்த தானம் முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் மாநகராட்சியில் மேக்னம் அரிமா சங்கம் இயங்கி வருகிறது.
இந்த சங்கத்தின் சார்பில்
2025-ம் ஆண்டு ஓசூர் 14-வது புத்தகத்
திருவிழாவை முன்னிட்டு
ஓட்டல் ஹில்ஸ் அரங்கில் கடந்த ஜுலை 13-ம் தேதியன்று முதல் மாபெரும் ரத்த தானம் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில்
69 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டு,
ஓசூர் சிப்காட் அரிமா ரத்த வங்கி -க்கு
வழங்கப்பட்டது.
இரண்டாவது மாபெரும்
ரத்த தானம் முகாம்
அதைத் தொடர்ந்து
14-வது புத்தகத் திருவிழாவின்
10-வது நாளில்(20-7-25) இரண்டாவது ரத்த தானம் முகாம் நடைபெற்றது.
ஜுலை 20-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை
நடந்த இந்த முகாமை
ஓசூர் மேக்னம் அரிமா சங்க தலைவர்
அரிமா. ஆறுமுகசாமி
தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
ஓசூர் அரசு மருத்துவமனை
இந்த ரத்த தானம் முகாமில்
ஓசூர் அரசு மருத்துவமனை மருத்துவர் தலைமையிலான குழுவினர் பங்கேற்று,
ரத்த தானம் பெறும் பணியில் ஈடுபட்டனர்.
ரத்த தானம் வழங்கும் கொடையாளர்களின்
உடலின் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டு, ரத்த தானம் பெறப்பட்டது.
52 யூனிட் ரத்தம் தானம்
இதில் புத்தகத்திருவிழாவுக்கு வருகை தந்த
ஆண், பெண் வாசகர்கள் பங்கேற்று ஆர்வத்துடன் ரத்த தானம் வழங்கினர்.
இந்த இரண்டாவது முகாமில் மொத்தம் 52 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
ரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மேலும் ஆப்பிள், வாழைப்பழம், பிஸ்கெட், பழரசம்
ஆகியவை வழங்கப்பட்டது.
இந்த இரண்டு முகாம்கள் மூலமாக
மொத்தம் 121 யூனிட் ரத்தம் தானமாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ரத்த தானம் முகாமில்
ஓசூர் 14-வது புத்தகத்திருவிழா நிர்வாகிகள்
மற்றும்
ஓசூர் மேக்னம் அரிமா சங்கத்தின்
அரிமா மகளிர் குழுவினர்
ஒருங்கிணைப்பாளர்
அரிமா. R. ரவிசங்கர்,
செயலாளர்(நிர்வாகம்)
அரிமா. K. பூபாலன்,
செயலாளர்(செயல் திட்டம்)
அரிமா S. விவேகானந்தன்,
பொருளாளர்
அரிமா Pa. அருண் லோகேஷ்,
ரத்த தானம் முகாம் தலைவர்
அரிமா. பிரபு கிருஷ்ணன்,
ஆலோசகர்
அரிமா. P.K. சபாபதி,
ஆகியோர் பங்கேற்றனர்.
-------------------------------------.