1940-ம் ஆண்டில்...
ராட்டையில் நூற்ற நூலில்
மாங்கல்ய நாண் தயாரித்து,
மஞ்சள் தடவிக் கொடுத்து இவரது மறுமணத்தை நடத்தி வைத்தார்
காந்தி அடிகள்.
இந்த விதவை – கலப்புத் திருமணம்
அக்காலத்தில் படுபரபரப்பாக பேசப்பட,
பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக வலம் வந்தார்
டி.எஸ். சௌந்தரம்.
ஆகஸ்ட் 18 – 1904 -
இந்தியாவின் தலைசிறந்த மருத்துவரும்,
விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரும்,
சமூக சீர்திருத்தவாதி
காந்திகிராம பல்கலைக்கழகத்தைத் தொடங்கிய
”டி.எஸ்.சௌந்தரம்”
121 – வது பிறந்ததினம்.
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். ஆகஸ்ட். 18. -
டி.எஸ்.சௌந்தரம்
திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி எனும் ஊரில் சுந்தரம்-இலட்சுமி அம்மாளுக்கு மகளாக பிறந்தார்.
இந்தியாவின் தலைசிறந்த மருத்துவர், விடுதலைப் போராட்ட வீராங்கனை,சமூக சீர்திருத்தவாதி என பன்முகத்தன்மை கொண்டவர்.
திருக்குறுங்குடியில் உள்ள பாடசாலையில் ஆரம்பக் கல்வி பயின்றார். முத்தையா பாகவதரிடம் வீணை இசை கற்றார்.
பன்னிரண்டாம் வயதிலேயே திருமணம் நடந்து, சில வருடங்களில் பிளேக் நோயினால் கணவர் இறந்துவிட, இளம் விதவையாக வீட்டுக்குள் முடக்கப்பட்டார் சௌந்தரம்.
விடுதலை வீரர் சுப்பிரமணிய சிவா, ‘வீட்டிலேயே பூட்டி வைத்து, வாழ்க்கையை வீணடிக்காதீர்கள்.
கல்வியைத் தொடரச் செய்யுங்கள்’ என்று சொன்னதுதான், சௌந்தரத்தின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.
இவர் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு காந்தியடிகளின் ஹரிஜன இயக்கத்தில் இணைந்தார்.
காந்தியடிகள் இவரை கஸ்தூரிபாய் காந்தி தேசிய நினைவு அறக்கட்டளையின் தென்னிந்தியப் பிரதிநியாக நியமித்தார்.
1940-ம் ஆண்டில், ராட்டையில் நூற்ற நூலில் மாங்கல்ய நாண் தயாரித்து,
மஞ்சள் தடவிக் கொடுத்து இவரது மறுமணத்தை நடத்தி வைத்தார் காந்தி அடிகள்.
இந்த விதவை – கலப்புத் திருமணம் அக்காலத்தில் படுபரபரப்பாக பேசப்பட, பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக வலம் வந்தார் சௌந்தரம்.
இவர் திண்டுக்கல் சின்னாளப்பட்டியில்
1947 ல் தொடங்கிய காந்தி கிராம அறக்கட்டளை 1976 ஆம் ஆண்டில் தன்னாட்சி பெற்ற காந்திகிராம பல்கலைக்கழகமாக மாறியது.
1952 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.
பெண்களின் திருமண வயது 18 ஆக உயர்த்தும் சட்ட முன் வடிவைக் கொண்டுவந்து அதை நிறைவேற்றினார்.
‘பத்ம பூஷண்’ என்ற உயரிய விருதைக் கொடுத்துக் கௌரவித்தது இந்திய அரசு.
-----------------------------------------------.