நேற்றைய வரலாறு
இன்றைய பாடம்
---------------------------------
கண்டுபிடிப்புகளின் பேரரசன் என அனைவராலும் புகழப்படும்
சாதனையாளர்
தாமஸ் ஆல்வா எடிசன்
ஜனவரி – 27 - 1880 –
தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார பல்புக்கான காப்புரிமம் பெற்ற தினம்.
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். ஜனவரி. 27. –
தாமஸ் ஆல்வா எடிசன்
எடிசன் என்றால் நம் நினைவுக்கு வரக்கூடிய கண்டுபிடிப்புகளில் முதன்மையானது மின்சார பல்பு.
1870-க்கு முன்னதாக எவரும் கற்பனையில் கூட நினைத்திருக்க மாட்டார்கள் இனி இரவும் பகல் போல மின்சார விளக்குகளால் மாறப்போகிறது என்று. அப்போது சில அறிவியலாளர்கள் சொன்னதைக்கூட நம்புவதற்கு ஆள் இல்லாத சூழல் இருந்தது. ஆனால் எடிசன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் மட்டும் அதற்கான முயற்சிகளில் உலகின் பல்வேறு இடங்களிலும் ஈடுபட்டார்கள்.
மின்சார பல்பு
மின்சார பல்பு கண்டறிவதில் இருக்கக்கூடிய மிக முக்கியமான சிக்கல் என்னவெனில் அதில் பயன்படுத்தக்கூடிய மின் இழையானது வெகு விரைவில் உருகி விடுகிறது. இதற்காக எடிசன் பல்வேறு பொருள்களை மின் இழையாக பயன்படுத்திப் பார்த்தார்.
அப்போதைய காலகட்டத்தில் எடிசன் மட்டுமல்ல உலகம் முழுமைக்கும் விஞ்ஞானிகள் பல்வேறு பொருள்களை வைத்து சோதனை நடத்திக்கொண்டு இருந்தனர்.
5000 முறை பரிசோதனை
இந்த முயற்சியில் எடிசன் 5000 முறைக்கும் மேல் பரிசோதனையில் ஈடுபட்டார். பிளாட்டினம் பொதுவாக மற்ற பொருள்களைக்காட்டிலும் அதிகமாக வெப்பநிலையை தாங்கும் என அவர் அறிந்திருந்தார்.
பிளாட்டினம்
ஆனால் அதற்கு பிளாட்டினம் நிறைய தேவைப்பட்டது. அதிக பல்புகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்றாலும் அதிகமாக பிளாட்டினம் தேவையாக இருந்தது.
$20,000 பரிசு அறிவிப்பு
ஆனால் எடிசன் தயங்கவில்லை, உடனடியாக உலகம் முழுமைக்கும் இருக்கக்கூடிய கண்டுபிடிப்பாளர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் இந்த உலோகம் எங்கிருந்தாலும் கூறுங்கள் என கேட்டு பிளாட்டினத்தையும் அதில் சிறிதளவு இணைத்து அனுப்பினார். அதோடு $20,000 பரிசையும் அறிவித்தார் எடிசன்.
தங்கத்தை பிரித்தெடுக்கும் முறை
கண்டுபிடிப்பு
இந்த கண்டுபிடிப்பில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் போதே அவர் இன்னொரு வியாபாரத்தையும் கண்டுபிடித்தார். அவர் மைனிங் வேலையின் போது கிடைக்கக்கூடிய குவியல்களில் இருந்து தங்கத்தை பிரித்தெடுக்கும் முறையை கண்டறிந்தார்.
இதன்மூலமாக $5 செலவில் கிடைக்கக்கூடிய குவியலில் இருந்து
$1400 மதிப்பிலான தங்கத்தை பிரித்தெடுத்தார்.
சிறிது ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் இது மிகப்பெரிய லாபம் தரும் முறையாக பார்க்கப்பட்டது. எடிசன் பல்புகளுக்கு பிளாட்டினம் பயன்படுத்த துவங்கிய விசயம் வெளியான 5 ஆண்டுகள் கழித்து பிளாட்டினம் விலையில் மிகப்பெரிய ஏற்றம் இருந்தது.
அதன் பிறகும் கூட எடிசன் தனது ஆய்வினை தொடர்ச்சியாக செய்துகொண்டே இருந்தார்.
ஜனவரி 27,1980ஆம் ஆண்டு
அமெரிக்கா அவரது
மின்சார பல்புக்கு
காப்புரிமையை வழங்கியது.
ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்திட வேண்டுமெனில் அதற்காக கடுமையான உழைப்பு மட்டும் அல்லாமல் மிகப்பெரிய பொருள்செலவையும் அவர் செய்தார்.
ஆனால் எடிசன் பணம் செலவாவதைப்பற்றி எப்போதும் கவலைப்பட்டதே இல்லை. அவர் மிகப்பெரிய வருமானத்தை தொடர்ச்சியாக கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்துகொண்டே இருந்தார்.
கண்டுபிடிப்புகளின் பேரரசன்
மிகக்கடுமையான உழைப்பு, எப்போதும் அயர்ந்துவிடாத தொடர் முயற்சி, மிகப்பெரிய பொருள் செலவு போன்ற பல்வேறு காரணங்கள் தான் இன்றளவும்
கண்டுபிடிப்புகளின் பேரரசன் என அனைவராலும் புகழப்படுகிறார் தாமஸ் ஆல்வா எடிசன்.
----------------------------------------