14 மாதங்களுக்கும் மேலாக
(437 நாட்கள் 18 மணிநேரம்)
தொடர்ந்து மீர் விண்வெளி
நிலையத்தில் தங்கியிருந்து,
அதிக நேரம்
விண்வெளியில் தங்கியதற்காக
சாதனை படைத்தவர்
வலேரி விளாதிமீரவிச்
பொல்யாக்கொவ்
ஏப்ரல் 27, 1942 –
அதிக நேரம் விண்வெளியில் தங்கியதற்காக சாதனை படைத்த
வலேரி விளாதிமீரவிச் பொல்யாக்கொவ்
(Valeri Vladimirovich Polyakov)
83-வது பிறந்த நாள்
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். ஏப். 27. –
வலேரி விளாதிமீரவிச்
பொல்யாக்கொவ்
(Valeri Vladimirovich Polyakov)
(27 ஏப்ரல் 1942 – 7 செப்டம்பர் 2022)
என்பவர் ஒரு சோவியத், ரஷ்ய விண்ணோடி ஆவார்.
14 மாதங்களுக்கும் மேலாக
(437 நாட்கள் 18 மணிநேரம்)
தொடர்ந்து மீர் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து,
அதிக நேரம் விண்வெளியில் தங்கியதற்காக
சாதனை படைத்தவர்.
அவரது ஒருங்கிணைந்த
விண்வெளி அனுபவம் 22 மாதங்களுக்கும் மேலாகும்.
1972 -ல் ஒரு விண்வெளி வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வலேரி, 1988 இல் சோயூசு டிஎம்-6 -ல் விண்வெளிக்கு தனது முதல் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டு, 240 நாட்களுக்குப் பிறகு சோயூசு டிஎம்-7 இல் பூமிக்குத் திரும்பினார்.
1994-1995 -ல் விண்வெளியில் தனது இரண்டாவது பயணத்தின் போது, சோயூசு டிஎம்-18 -ல் ஏவுவதற்கும்
டிஎம்-20 உடன்
தரையிறங்குவதற்கும்
இடையில் 437 நாட்கள்
விண்வெளியில் செலவழித்து,
ஒரு தனிநபரால் அதிக நேரம் விண்வெளியில் தொடர்ந்து
செலவழித்த சாதனையைப்
படைத்தார்.
தொடக்க வாழ்க்கை
சோவியத் ஒன்றியத்தில் தூலா நகரில் பிறந்த இவர் 1972 மார்ச் 22 இல் விண்வெளிப் பயணத்துக்காக மூன்றாம் மருத்துவப் பிரிவில் சேர்க்கப்பட்டார். 1995 ஜுன் 1-ல் இளைப்பாறினார்.
வலேரி தூலாவில் தனது ஆரம்பக் கல்வியை 1959 -ல் முடித்து மாஸ்கோவில் முதலாம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவப் பட்டம் பெற்றார். பின்னர் வானியல் மருத்துவத்தில் சிறப்பு பயிற்சி பெற்றார்.
விண்வெளிப் பயணங்கள்
சோயூசு டிஎம்-6 / சோயூசு டிஎம்-7 – 28 ஆகத்து 1988 முதல் 27 ஏப்ரல் 1989 வரை – 240 நாட்கள், 22 மணி, 34 நிமிடம்.
சோயூசு டிஎம்-18 / சோயூசு டிஎம்-20 – 8 சனவரி 1994 முதல் 22 மார்ச் 1995 – 437 நாட்கள்,17 மணி, 58 நிமிடம்.
விருதுகள்
ரஷ்சியக் கூட்டமைப்பின் வீரர்
சோவியத் ஒன்றியத்தின் வீரர்
செவாலியே விருது (பிரான்சு)
லெனின் பதக்கம்
அசுத்தூரியாசு இளவரசர் விருது (எசுப்பானியா)
பரசாத் பதக்கம் (கசக்கசுத்தான்)
---------------------------------------.